தாஜ் மஹால் நிறம் மாறியது ஏன்?: உச்ச நீதிமன்றம் கேள்வி

வெள்ளை பளிங்கு மாளிகையாக கம்பீரமாக உயர்ந்து நின்ற தாஜ் மஹால் பழுப்பாக இருந்து, தற்போது பச்சை மற்றும் அடர்சிவப்பாக நிறம்
தாஜ் மஹால் நிறம் மாறியது ஏன்?: உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுதில்லி: வெள்ளை பளிங்கு மாளிகையாக கம்பீரமாக உயர்ந்து நின்ற தாஜ் மஹால் பழுப்பாக இருந்து, தற்போது பச்சை மற்றும் அடர்சிவப்பாக நிறம் மாறியது ஏன்? என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

ஆக்ராவில் உள்ள உலகின் அதிசயங்களில் ஒன்றாகவும், வெள்ளை பளிங்கு மாளிகையாக கம்பீரமாக உயர்ந்து நின்று காட்சியளித்த தாஜ் மஹால் சமீபகாலமாக நிறம்மங்கி பொலிவிழந்து விட்டதாக உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. 

வெள்ளை பளிங்கு கற்களால் கட்டப்பட்டுள்ள, உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் தாஜ்மஹாலை ஒட்டியுள்ள யமுனை ஆற்றுப் பகுதியில் உள்ள மரங்களை இனியாவது வெட்டாமல் தடுக்குமாறு உத்தரவிட வேண்டும். வாயு கழிவுகளால் மாசு அடைவதில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும், எம்.சி.மேத்தா என்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

இந்த வழக்கு உச்ச நீதிபதிகள் எம்.கே.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. எம்.சி. மேத்தா சமர்ப்பித்த புகைப்படங்களை பார்வையிட்ட நீதிபதிகள், முதலில் வெளிர்மஞ்சள் நிறத்தில் இருந்த தாஜ்மஹால், மாசுபாட்டால் பழுப்பு நிறமாகவும், தற்போது பச்சையாகவும், அடர்சிவப்பு நிறமாகவும் காணப்படுவதாக வேதனை தெரிவித்த நீதிபதிகள், இதுகுறித்து மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞரிடம் தாஜ் மஹாலை மாசுப்பாட்டில் இருந்து பாதுகாக்க உங்களிடம் தேவையான நிபுணர்கள் இல்லையா? அல்லது இருந்தும் இதுதொடர்பாக நீங்கள் அக்கறை எடுக்கவில்லையா? தாஜ் மஹால் எப்படியாவது போகட்டும் என்று முடிவெடுத்து விட்டீர்களா? என்று கேள்விகளை எழுப்பினர். 

அப்போது தாஜ் மஹாலை பராமரிக்கும் நிர்வாக பொறுப்பு இந்திய தொல்லியல் துறையிடம் உள்ளதாக தெரிவித்தார் அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர். 

இந்த விவகாரத்தில் உங்களிடம் நிபுணர்கள் இல்லாமல் போனாலும் நமது நாட்டில் உள்ள வல்லுநர்கள் அல்லது வெளிநாட்டு வல்லுநர்களின் ஆலோசனையை பெறலாம் என்று தெரிவித்த நீதிபதிகள், வல்லுநர்களின் உதவியுடன் முதலில் சேதத்தை மதிப்பீடு செய்து பின்னர் சுற்றுச்சூழல் மாசுபாட்டில் இருந்து வரலாற்று நினைவுச்சின்னத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்திய உச்ச நீதிமன்றம், வழக்கின் விசாரணையை வரும் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com