விமானத்தில் பயணம் செய்யும் போது செல்போன் பயன்படுத்தலாமா? தொலைதொடர்பு ஆணையம் விளக்கம்

இந்திய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான பயணத்தின்போது செல்போன் மற்றும் இணைய சேவைகளை பயன்படுத்துவதற்கு தொலைதொடர்பு
விமானத்தில் பயணம் செய்யும் போது செல்போன் பயன்படுத்தலாமா? தொலைதொடர்பு ஆணையம் விளக்கம்

புதுதில்லி: இந்திய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான பயணத்தின்போது செல்போன் மற்றும் இணைய சேவைகளை பயன்படுத்துவதற்கு தொலைதொடர்பு ஆணையம் இன்று அனுமதி அளித்துள்ளது. 

விமான பயணத்தின் போது செல்போன் பயன்படுத்தக்கூடாது என்ற விதி உள்ளது. அதனை மாற்றியமைத்து விமான பயணத்தில் செல்போன் மற்றும் இண்டர்நெட் பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும் என டிராய் அமைப்பு மத்திய தொலை தொடர்பு ஆணையத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், அதனை ஏற்றுக்கொண்ட தொலை தொடர்பு ஆணையம், இந்திய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான பயணத்தின் போது செல்போன் பயன்படுத்த இன்று அனுமதி அளித்துள்ளது என தொலைத் தொடர்பு செயலாளர் அருணா சுந்தரராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

விமானம் புறப்படும் போதும், தரையிறங்கும்போதும் செல்போன் பயன்படுத்த கூடாது என்றும், விமானம் 3 ஆயிரம் மீட்டர் உயரத்திற்கு மேலே பறக்கும்போது மட்டுமே செல்போனில் பேசவும், இணையதளங்களை பயன்படுத்தவும் அனுமதி வழங்கப்பட உள்ளது. மேலும், விமானி ஆட்சேபனை தெரிவிக்கும் பட்சத்தில் பயணத்தின் போது செல்போன், இணையதள பயன்பாட்டிற்கு அனுமதி கிடையாது. 

இந்த அறிவிப்பு சிறந்த மற்றும் திருப்திகரமான நுகர்வோர் குறைதீர்ப்புக்கு வழி வகுக்கும். தொலைத்தொடர்பு துறையில் காலாண்டில் 10 மில்லியனுக்கும்
குறைவான வருவாயைப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். 

விமான நிறுவனங்கள் மற்ற சில நிறுவனங்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்ய அவகாசம் தேவைப்படுவதால், இந்த திட்டம் அடுத்த 3 அல்லது 4 மாதங்களுக்கு பிறகு தான் அமல்படுத்தப்படும் என தெரிகிறது. 

இந்த அறிவிப்பு விமான பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com