எடியூரப்பாவுக்கு விபரீத ராஜயோகம்: ஜோதிடர்களின் கணிப்பு என்ன?

கர்நாடகா சட்டப் பேரவைத் தேர்தலில் அதிக இடங்களை பிடித்தும் பெரும்பான்மை இல்லாத காரணத்தால்
எடியூரப்பாவுக்கு விபரீத ராஜயோகம்: ஜோதிடர்களின் கணிப்பு என்ன?

கர்நாடகா சட்டப் பேரவைத் தேர்தலில் அதிக இடங்களை பிடித்தும் பெரும்பான்மை இல்லாத காரணத்தால் ஆட்சி அமைக்க முடியாத நிலையில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது.

இதையடுத்து இன்று மாலை புதிய அரசை அமைக்க எடியூரப்பாவுக்கு கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்துள்ளார். பெரும்பான்னையை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு 15 நாள் அவகாசம் வழங்கியுள்ளார். இதையடுத்து எடியூரப்பாவின் ஜாதகம் என்ன சொல்கிறது தெரியுமா ?

எடியூரப்பா ஜாதகத்தில் விருச்சிக ராசி, சந்திரன் விருச்சிகத்தில் அமர்ந்துள்ளார். தனுசு லக்னம்,செவ்வாய் அமர்ந்துள்ளார். மகரத்தில் புதன், கும்பத்தில் சூரியன் கேது, மீனத்தில் சந்திரன் உச்சம் பெற்று அமர்ந்துள்ளார். ரிஷபத்தில் சனி, மிதுனத்தில் வியாழன், சிம்மத்தில் ராகு அமர்ந்துள்ளனர். எடியூரப்பாவிற்கு எட்டாம் அதிபதியான சந்திரன் 12ஆம் வீட்டில் அமர்ந்துள்ளது விபரீத ராஜ யோகம் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். 

எடியூரப்பாவிற்கு இப்போது சந்திர தசை நடக்கிறது. சூரிய தசை நடந்த போது கடந்த 2007ஆம் ஆண்டு 7 நாட்கள் முதல்வரானார். அதன்பின்னர் 3 ஆண்டுகள் முதல்வரானார்.  எட்டாம் அதிபதியாக உள்ள சந்திரன் 12ல் மறைந்து உள்ளார். விபரீத ராஜயோகத்தின் படி அவர் முதல்வர் ஆவாரா இல்லையா என்பதை பொறுத்திருந்தே பார்ப்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com