எல்லையில் ராணுவத்தின் பதிலடியை தாங்க முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் கெஞ்சல்!

எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவ வீரர்கள் கொடுத்து வரும் பதிலடியை தாங்க முடியாத பாகிஸ்தான்
எல்லையில் ராணுவத்தின் பதிலடியை தாங்க முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் கெஞ்சல்!

புதுதில்லி: எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவ வீரர்கள் கொடுத்து வரும் பதிலடியை தாங்க முடியாத பாகிஸ்தான் ராணுவ வீரர்ரகள் தாக்குதலை நிறுத்துங்கள் என கெஞ்சி வருகின்றர். 

காஷ்மீரில் எல்லையில் பாகிஸ்தானின் அத்துமீறல் அதிகரித்து வரும் நிலையில், எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவ தயாராக உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனையடுத்து எல்லையில் பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்டது. 

இந்நிலையில், இன்று சர்வதேச எல்லையில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் படைகளுக்கு இந்திய ராணுவம் சரமாரியான பதிலடியை கொடுத்து உள்ளது. பதிலடியை தாங்க முடியாத பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், தாக்குதலை நிறுத்துக்கள் என கெஞ்சி உள்ளனர் என எல்லைப் பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எல்லைப் பாதுகாப்பு படை கொடுத்த பதிலடியில் பாகிஸ்தானின் நிலைகள் சிதைக்கப்பட்டுள்ளது, பாகிஸ்தான் படைக்கு பெரும் உயிரிழப்பும் நேரிட்டு உள்ளது.

சர்வதேச எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வீடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் நிலைகள் சிதைப்பு உள்ளிட்ட காட்சிகள் அதில் அடங்கி உள்ளது.

கடந்த மூன்று நாட்களாக பாகிஸ்தான் படைகள் எங்கெல்லாம் அத்துமீறியதோ அங்கெல்லாம் அவர்களுடைய நிலைகளை இந்திய ராணுவம் சிதைத்து உள்ளது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு பிராந்திய எல்லைப் பாதுகாப்பு படைக்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான் படை, எல்லையில் தாக்குதலை நிறுத்துக்கள் என மன்றாடியதாக எல்லைப் பாதுகாப்பு படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தொடர்ச்சியாக அத்துமீறி கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியது, அதற்கு பதிலடியாகதான் இப்போது தாக்குதல் எடுக்கப்பட்டு உள்ளது எனவும் எல்லைப் பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சமீபத்தில் ஜம்முவில் சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் இருவர் வீரமரணம் அடைந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com