மகிழ்வான வாழ்வுக்கு ஒரு மாய மந்திரம்..! “ஓம்”

ஓம் என்ற பிரணவ மந்திரம் உள்ளத்தில் ஒலித்தால் மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்வை தரும். அமைதியை
மகிழ்வான வாழ்வுக்கு ஒரு மாய மந்திரம்..! “ஓம்”

ஓம் என்ற பிரணவ மந்திரம் உள்ளத்தில் ஒலித்தால் மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்வை தரும். அமைதியை தேடி அலைகின்ற மனங்கள் ஜெபிக்க வேண்டிய மந்திரம் ஓம். ஒற்றைச் சொல்தான் என்றாலும் அதன் சக்தி சொற்களை கடந்தது. ஓம் எனும் மந்திரம் செய்யும் அற்புதங்கள்  அனுபவ பூர்வமாக நாம் உணர வேண்டிய ஒன்று. 

'ஓம்' என்று தொடர்ந்து உச்சரித்துக்கொண்டிருந்தால், உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைத்து, நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாவதுடன், இன்சுலின் சுரப்பும் சீராக உள்ளது என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிந்துள்ளது.

மேற்கு வங்கமாநிலத்தில் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறிவியல் கண்காட்சியில் ஆடம்ஸ் உலக பள்ளியில் 9ஆம் வகுப்பு பயிலும் 14 வயது மாணவி அனேசா ராய் சௌத்ரி ஓம்' மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கிறது மற்றும் கார்பன் டை ஆக்சைடு மற்றும் லாக்டிக் அமிலத்தை குறைக்கிறது, இதனால் சோர்வு நிலை குறைகிறது என்பதை கண்டுபிடித்துள்ளார். 

கொல்கத்தா  பல்கலைக்கழகத்தின் இயற்பியல் மற்றும் உடற்கூறியல் பேராசிரியர்களாலும் ஜடாவ்பூர் பல்கலைக்கழகத்தினாலும் இது ஆய்வு செய்யப்பட்டது.

கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் உடற்கூறியல் துறை தலைவரான தேபாஷிஷ் பந்தபத்யாயி கூறும் போது அனேசா ராயின் கண்டுபிடிப்பு நம்பகத்தன்மை மிகுந்ததாகவும் தெளிவானதாக உறுதிப்படுத்தக்கூடியதாகவும் இருக்கிறது என  தெரிவித்துள்ளார். 

குறிப்பிட்ட அதிர்வெண் கொண்ட ஒலியைக் கேட்டறிந்திருந்தால் அல்லது சரியாக வாசிக்கப்பட்டால், செரோடோனின், டோபமைன், போன்ற நரம்பியக்கடத்திகள் மற்றும் ஹார்மோன்களின் நிலைகளை எழுப்புகிறது. அவற்றின் வேசோடைலேட்டரி செயல்களின் காரணமாக, இரத்த ஓட்டத்தில் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கிறது. இது குறைவான லாக்டிக் அமிலத்தையும் உற்பத்தி செய்கிறது என்பதை நான் கண்டுபிடித்தேன். ஆனால் 'ஓம்' ஒலிப்பில் இந்த குறிப்பிட்ட கண்டுபிடிப்பு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது "என்று மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை செயலாளர் ரினா வெங்கடராமன் தெரிவித்தார்.

'ஓம்' ஒலிப்பதன் மூலம் ஏற்பட்டும் இத்தகைய மாற்றத்தை யாரும் முன்கூட்டியே துள்ளியமாக சுட்டிக்காட்டவில்லை. மேலும் இதுகுறித்த முழுமையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று மேற்கு வங்க மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையைச் சேர்ந்த மூத்த விஞ்ஞானி திப்பாங்கர் தாஸ் கூறினார்.

ஓம் மந்திரத்தை உச்சரிப்பதால் உடலுக்கு அதிகப்படியான ஆக்சிஜன் கிடைப்பதோடு,  ரத்த ஓட்டமும் சீராகிறது. இதயமும் செரிமான மண்டலமும் ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவுகிறது அதோடு மட்டும் அல்லாமல்  'ஓம்' என்று உச்சரித்துவர நாளடைவில் நம் எண்ணங்களின் மீது சுயக்கட்டுப்பாடு அதிகரிக்கிறது. இதனால், தேவையற்ற சிந்தனைகள், எண்ணங்கள், உணர்வுகள் உருவாவது தடுக்கப்படுகிறது. தூயமையான எண்ணத்தோடு சாந்தமான ஆரோக்கியமான ஒரு வாழ்வு வாழ ஓம் என்று உச்சரிப்போம் உன்னத வாழ்வுதனை பெறுவோம்..!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com