தமிழகத்தில் தேசியக் கட்சிகளுக்கு வாய்ப்பு கிடையாது: தம்பிதுரை பரபரப்பு பேட்டி  

தமிழகத்தைப் பொருத்த வரையில் திராவிட கட்சிகள் மட்டும் தான் ஆட்சி அமைக்கும் என்பதற்கு கர்நாடகாவில் நடந்து முடிந்த தேர்தல் முடிவிற்கு
தமிழகத்தில் தேசியக் கட்சிகளுக்கு வாய்ப்பு கிடையாது: தம்பிதுரை பரபரப்பு பேட்டி  

கிருஷ்ணகிரி: தமிழகத்தைப் பொருத்த வரையில் திராவிட கட்சிகள் மட்டும் தான் ஆட்சி அமைக்கும் என்பதற்கு கர்நாடகாவில் நடந்து முடிந்த தேர்தல் முடிவிற்கு பின்னர் நடந்து முடிந்த சம்பவங்களே சான்று  என்றும் அதுதான் தென்னிந்தியாவைப் பொறுத்தவரையில் நடந்து கொண்டு வருகிறது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். 

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் செய்தியாளர்களிடம் தம்பிதுரை கூறுகையில், காவிரி பிரச்சனையில் ஒத்துழைக்க தயார் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார். நீதிமன்றம் உத்தரவுப்படி செயல்பட தயார் என்றும் தெரிவித்துள்ள குமாரசாமி, தண்ணீரை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளப்படி செயல்படுவார் என்று நம்புகிறோம்.

கர்நாடகாவில் ஒரு மாநில கட்சியின் தலைவர்தான் முதல்வராகி உள்ளார். அங்கு மாநில கட்சியின் ஆட்சிதான் நடைபெறுகிறது. இந்தியாவில் அந்தந்த மாநில உணர்வுகளுக்கு ஏற்ப தான் தலைவர்கள் உருவாகி வருகிறார்கள். அதேபோல் தமிழகத்தை பொறுத்தவரையில் எந்த தேசியக் கட்சிக்கும் வாய்ப்பு கிடையாது. அதிமுக தொடந்து ஆட்சி செய்யும் என்றார்.

மேலும், தமிழகத்தைப் பொருத்த வரையில் திராவிட கட்சிகள் மட்டும் தான் ஆட்சி அமைக்கும் என்பதற்கு கர்நாடகா ஒரு நல்ல சான்று. தென்னிந்தியாவைப் பொறுத்தவரையில் இப்படித்தான் நடந்து கொண்டு வருகிறது.

மாநில கலாச்சாரத்தையும் மொழியையும் மதிக்க வேண்டும் என்பதுதான் பெரியார், அண்ணா ஆகியோரின் கொள்கையாகும். அந்த வகையில் தான் அதிமுக செயல்பட்டு வருகிறது.

மாநில உரிமைகளை பெற்று அந்தந்த மொழிகளை காப்பது நம் கடமையாகும். தமிழ்நாடு, தமிழ்மொழி, தமிழினம் இவற்றை காக்க அதிமுக என்றும் போராடும் என்று தம்பிதுரை கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com