வழக்கு மட்டுமல்ல, துப்பாக்கியால் சுட்டாலும் தாங்கிக் கொள்வேன்: மு.க.ஸ்டாலின் பேட்டி

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் குறித்து பணியில் உள்ள நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என
வழக்கு மட்டுமல்ல, துப்பாக்கியால் சுட்டாலும் தாங்கிக் கொள்வேன்: மு.க.ஸ்டாலின் பேட்டி

தூத்துக்குடியில் அப்பாவி மக்கள் மீது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தற்காக தம்மீது வழக்கு மட்டுமல்ல, துப்பாக்கியால் சுட்டாலும் தாங்கிக் கொள்வேன் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக் கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை (மே 22) முற்றுகையிட முயன்றனர். இதைத் தொடர்ந்து ஏற்பட்ட சட்டம்-ஒழுங்கு சம்பவங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு அறிக்கை அளித்திட ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது என தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருநபர் விசாரணை ஆணையம் தொடர்பாக, தனியான அரசாணை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்தை திமுகவும், காங்கிரசும் புறக்கணித்தன. இதன்பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மு.க.ஸ்டாலின், தூத்துக்குடிக்கு சென்றதற்காக தம்மீது வழக்கு மட்டுமல்ல, துப்பாக்கியால் சுட்டாலும் தாங்கிக் கொள்வேன் என கூறினார். 

மேலும், தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் குறித்து பணியில் உள்ள நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

அருணா ஜெகதீசன் கடந்த 2009-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றப் பதிவாளராக (ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு) இருந்தார். பின்னர் அதே ஆண்டில் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட அருணா ஜெகதீசன், 2015-ஆம் ஆண்டு வரை நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com