புதுச்சேரியில் தமிழக அரசுப் பேருந்து தீவைத்து எரிப்பு

புதுச்சேரி கனகசெட்டிகுளத்தில் தமிழக அரசுப் பேருந்தை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர்.
புதுச்சேரியில் தமிழக அரசுப் பேருந்து தீவைத்து எரிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி கனகசெட்டிகுளத்தில் தமிழக அரசுப் பேருந்தை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை (மே 22) நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின்போது, போலீஸார் தடியடி, கண்ணீர் புகைகுண்டு வீச்சு மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் புதன்கிழமை நிலவரப்படி, 2 பெண்கள் உள்பட 12 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், போலீஸாரின் தடியடியில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, தூத்துக்குடி சாயர்புரம் அருகேயுள்ள இருவப்பபுரத்தைச் சேர்ந்த செல்வசேகர் (42) வியாழக்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து தூத்துக்குடி சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. பலர் இன்னும் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறார்கள். இதையடுத்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. 

இந்நிலையில், புதுச்சேரியிலிருந்து இன்று மாலை தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்து, கனகசெட்டிக்குளம் பகுதியில் வந்துகொண்டிருந்த போது சிலர் வந்து பேருந்தை மறித்து நிறுத்தினர். பின்னர் பேருந்தில் இருந்த பயணிகளை வேகமாக கீழே இறங்குமாறு கூச்சலிட்டதை அடுத்து பயணிகள் அனைவரும் பதற்றத்துடன் வேகமாக கீழே இறங்கினர்.

பின்னர் மர்ம நபர்கள் பேருந்துக்குத் தீ வைத்துவிட்டு தப்பிச்சென்று விட்டனர். தமிழக அரசுப் பேருந்து மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். அரசு பேருந்துக்கு தீ விபத்த மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com