வைகாசி விசாக திருவிழா: திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள்

வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கபடுகின்றன. 
வைகாசி விசாக திருவிழா: திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள்

வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கபடுகின்றன. 

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா வருகிற 28-ந்தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.

விசாக திருநாளான 28-ந்தேதி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. அதிகாலை 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு முனி குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7.15 மணிக்கு இராக்கால அபிஷேகம் நடக்கிறது.

வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாகவும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் கோவிலுக்கு வந்து முருகபெருமானை வழிபடுவார்கள். வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கபடுகின்றன.  
அதேபோல் குமரி மாவட்டத்தில் இருந்து உவரி, திருச்செந்தூருக்கு ஏராளமான பக்தர்கள் செல்வதால் அரசு போக்குவரத்து கழகம் மரி மாவட்டத்தில் இருந்து செல்லும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்களை நாகர்கோவிலில் இருந்து இயக்குகிறது. அதன்படி உவரிக்கு 50 பஸ்களும், திருச்செந்தூருக்கு 20 பஸ்களும் இயக்கப்படுகிறது. நாகர்கோவிலில் இருந்து உவரிக்கு செல்லம் பஸ்கள் வள்ளியூர், மன்னார்குளம், திசையன்விளை, இடையன்குடி வழியாக உவரிக்கு செல்லுகின்றன. திருச்செந்தூருக்கு செல்லும் பஸ்கள் வள்ளியூர், திசையன்விளை, சாத்தான்குளம் வழியாக திருச்செந்தூருக்கு செல்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com