மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்!

தொழில்நுட்ப வல்லுனரும், மைக்ரோசாஃப்ட்டின் இணை நிறுவனரும், வல்கனின் நிறுவனரான பால் ஆலன்(65), லிம்போமா எனும் ரத்தப்
மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்!

வாஷிங்கடன்: தொழில்நுட்ப வல்லுனரும், மைக்ரோசாஃப்ட்டின் இணை நிறுவனரும், வல்கனின் நிறுவனரான பால் ஆலன்(65), லிம்போமா எனும் ரத்தப் புற்றுநோயால் காலமானார். 

கடந்த 1975-ஆம் ஆண்டில், பில்கேட்ஸ்(19) மற்றும் பால் ஆலன்(22) இருவரும் இணைந்துத் துவக்கியதுதான் மைக்ரோசாஃப்ட். அந்த நிறுவனம் மூலம் கம்ப்யூட்டர் மூலமாக புதிய புரட்சியை செய்து பெரும் பாணக்காரர்கள் ஆனார்கள். உலகளவில் 46-வது பெரிய கோடீஸ்வரராக அறியப்படும் பால் ஆலன், கேட்ஸுக்கும் இடையேயான ஏற்பட்ட நட்பின் விரிசலால் 8 ஆண்டுகள் கழித்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை விட்டு வெளியேறினார். 

2009-ஆம் ஆண்டு புற்றுநோயுடன் போராடி வென்ற ஆலனுக்கும் மீண்டும் புற்றுநோய் வந்துள்ளதாக கடந்த இரு வாரங்களுக்கு முன்பு தெரியவந்தது. இதையடுத்து சிகிச்சை பெற்று வந்த ஆலன் திங்கள்கிழமை மதியம் சிகிச்சை பலனின்றி சியாட்டில் உயிரிழந்தார். 

20.2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சொத்துக்களுக்கு சொந்தக்காரரான ஆலனுக்கு ஈர்த்த மற்றொன்று விளையாட்டு.  நேஷனல் கால்பந்து லீக்கைச் சேர்ந்த சியாட்டல் சீஹாக்ஸ் மற்றும் நேஷனல் கூடைப்பந்து அமைப்பைச் சேர்ந்த போர்ட்லேண்ட் டிரெயில் பிளேஸர்ஸ் அணிகளின் உரிமையாளர் ஆவார்.

ஆலன் மறைவு குறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சத்ய நாதெள்ளா வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், 'மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கும், தொழில்துறைக்கும் அவரின் பங்களிப்பு அளப்பரியது. தொடர்ந்து அமைதியாக பணிபுரிந்தாலும், தொழில்நுட்பத்தில் பல உயரங்களை அவர் தொட்டவர். அவரது புதியதாகக் கற்றுக்கொள்ளும் ஆர்வம், தனது எல்லைகளை விரிவாக்கும் திறன் ஆகியவற்றைக் கண்டு நான் வியந்திருக்கிறேன். என்னைப் போலவே, மைக்ரோசாப்ட்டில் இருக்கும் அனைவரையும் அவர் தன்வசம் ஈர்த்திருந்தார். அவரது 'ஆன்மா இறைவனில் காலடியில் உறங்கட்டும்' எனக் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com