என் தந்தை மீதே மீடூ புகார் இருந்தாலும் நான் மீடூ எழுச்சியை தொடர்ந்து ஆதரிக்கவே செய்கிறேன்: நந்திதா தாஸ்!

நந்திதா தாஸின் தந்தை ஜதின் தாஸ் புகழ்பெற்ற ஓவியர். அவர் தனது ஓவியத்திறமைக்காக பத்பபூஷன் விருது பெற்றவர். அவர் மீது தான், நிஷா போரா எனும் பெண் தற்போது மீடூ குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். 
என் தந்தை மீதே மீடூ புகார் இருந்தாலும் நான் மீடூ எழுச்சியை தொடர்ந்து ஆதரிக்கவே செய்கிறேன்: நந்திதா தாஸ்!

நடிகை நந்திதா தாஸை நினைவிருக்கிறதா? அழகி திரைப்படத்தில் வந்து தமிழர்களின் மனம் கவர்ந்தாரே அவரே தான். இவருடைய தந்தை ஜதின் தாஸ் புகழ்பெற்ற ஓவியர். அவர் தனது ஓவியத்திறமைக்காக பத்பபூஷன் விருது பெற்றவர். அவர் மீது தான், நிஷா போரா எனும் பெண் தற்போது மீடூ குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். 

தன் தந்தை மீதான குற்றம் நிரூபிக்கப்படும் வரை அதைக் குறித்து தான் எதையும் சொல்ல முடியாத போதும், பணியிடங்களில் பாலியல் தொந்திரவுக்கு ஆளாகக் கூடிய பெண்களுக்கு தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் மீட்டுத் தரும் வகையிலும், பெண்கள் அனுபவித்த மன உளைச்சலுக்கு மருந்திடும் வகையிலும் இந்தியாவில் கிளர்ந்தெழுந்துள்ள மீடூ எழுச்சியை நான் தொடர்ந்து ஆதரிக்கவே செய்கிறேன் என்று நடிகையும், ஓவியர் ஜதின் தாஸின் மகளுமான நந்திதா தாஸ் தெரிவித்துள்ளார்.

ஜதின் தாஸ்... நிஷா போரா...
ஜதின் தாஸ்... நிஷா போரா...

ஜதின் தாஸ் மீது மீடூ குற்றச்சாட்டை முன் வைத்துள்ள நிஷா போரா, தன்னுடைய 28 வது வயதில் தான் பிரபல ஓவியர் ஜதின் தாஸை ஒரு இரவு விருந்தில் சந்தித்ததாகவும், அப்போது அவர் கிட்கி கிராமத்தில் இருக்கும் தன்னுடைய ஓவியப் பட்டறையில் சில நாட்களுக்கு தன்னுடைய உதவியாளராகப் பணிபுரிய முடியுமா என்று தன்னிடம் வேண்டுகோள் விடுத்ததாகவும் மறுநாள் அவரது வேண்டுகோளை ஏற்று தான் அந்தக் கிராமத்திற்குச் சென்று அவருடன் பணிபுரிய சம்மதம் தெரிவித்ததும் அங்கு வைத்து அவர் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜதின் தாஸின் திடீர் பாலியல் தாக்குதலால் நிலைகுலைந்த போதும் விரைவில் சுதாரித்துக் கொண்டு அவரைத் தாக்கி விட்டு தான் தப்பியோடிய போது, போகாதே நில்... நான் நன்றாகச் செயல்படுவேன்’ என்று விஷமத்தனமாகப் பேசி தன்னை அவர் தடுத்ததாகவும்... நிஷா குற்றம் சாட்டியுள்ளார்.

ஆனால் நிஷாவின் குற்றச்சாட்டை மறுத்துள்ள ஜதின் தாஸ். இது முற்றிலும் வக்கிரத்தனமான குற்றச்சாட்டு என அதைப் பற்றி குறிப்பிட்டு, இப்போதெல்லாம் யார் யாரோ வருகிறார்கள்... திடீரென யார் மீதாவது பாலியல் வன்முறைக் குற்றச்சாட்டை எழுப்புகிறார்கள். அதில் சில குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுத் தருவதாக இருக்கலாம். ஆனால், ஒருசிலர் ஒரு கேளிக்கை விளையாட்டுப் போல குற்றமற்றவர்களின் மீதும் குற்றம் சுமத்தி சோதிக்கிறார்கள். இந்த நிலை கண்டு நான் அதிர்ச்சியடைந்திருக்கிறேன். என்று தன் மீதான குற்றச்சாட்டுக்கு எதிர்வினையாற்றி இருக்கிறார் ஜதின் தாஸ்.

தந்தையைப் போலவே நடிகை நந்திதா தாஸும், மீடூ பாதிக்கப்பட்ட பெண்களுக்கான மிகப்பெரிய வரப்பிரசாதம்... ஆனால் சிலர் பழிவாங்கலுக்காகவோ, விளையாட்டுத்தனமாகவோ இப்படிப்பட்ட குற்றச்சாட்டை பிறர் மீது வைக்கும் போது தன்னியல்பாக கிளர்ந்தெழுந்துள்ள மீடூ இயக்கத்தின் நோக்கம் நீர்த்துப்  போக வழிவகுப்பதாக இருக்கிறது. எனவே இவ்விஷயத்தில் பொய்யான குற்றச்சாட்டுகளை எழுப்புபவர்கள் சற்றுக் கவனமாக இருக்க வேண்டும். என்று தம் கருத்தைப் பதிவு செய்துள்ளார் நந்திதா தாஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com