இனி தூண்டில்களுக்கும் தூக்கமில்லை: கவிஞர் பா.விஜய் மீ டூ கவிதை

இந்தியாவில் அரசியல் மற்றும் ஆன்மீக பரபரப்புகளுக்கு மத்தியில் திரும்பும் திசையில் தெறிக்கவிடப்பட்டு வரும் விவகாரம் மீ டூ-வின் பெரும் சர்ச்சையில்
இனி தூண்டில்களுக்கும் தூக்கமில்லை: கவிஞர் பா.விஜய் மீ டூ கவிதை


இந்தியாவில் அரசியல் மற்றும் ஆன்மீக பரபரப்புகளுக்கு மத்தியில் திரும்பும் திசையில் தெறிக்கவிடப்பட்டு வரும் விவகாரம் மீ டூ-வின் பெரும் சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர் ஒருவர் தனது பதவியையே இழந்துள்ளார். இதையடுத்து காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்ற பழமொழிக்கு ஏற்ப அரசியல், ஊடகம், பாலிவுட், சின்னத்திரை, வெள்ளித்திரை என அனைத்து தரப்பில் இருந்தும் மீ டூ விவகாரம் பெரும் புயலாய் புறப்பட்டு பெண்கள் மத்தியில் புரட்சி வெடித்து வருகிறது. 

இந்நிலையில், கவிஞரும், பாடலாசிரியருமான பா.விஜய் மீ டூ குறித்து கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

ஒரு மீ டூ கவிதை 
எடுதட்டுமா என்றேன் 

மீம்ஸ் போடுவார்கள்.. 
மிரட்டினர் நட்புகள். 

மீம்சுக்கு பேனாக்கள் மிரளாது 

ஞாயிற்றுக் கிழமைக் கிழமை என்பதால் 
மீ டூ உடன் மீனும் சோ்ந்து கொண்டது. 

மீன் 2 வைப் பார்த்துக் கேட்டது மீன் 1. 
மீ டூ மீ டூ என்றால் என்ன? 

மீன் 2 சொன்னது 
மீ டூ மீ டூ என்றால்.. 

மாதர் தம்மை இழிவு செய்யும் 
மடமையைக் கொளுத்துவோம் 
என்றானே பாரதி 
அது தான் மீ டூ. 

புரிந்த மீன் 1 
தெளிந்து கேட்டது.. 

மாதர் தம்மை இழிவு செய்யும் 
மடமையைக் கொளுத்துவோம் 
என்றாயே பாரதி.. ஒரு சில 
மாதர் செய்யும் மடமையை 
யார் கொளுத்துவது? 

மீனிங் புரிந்த மீன் 2 
இது மீ டூ பிரச்னை என்று 
மீண்டது. 
இனி தூண்டில்களுக்கு தூக்கமில்லை 

பா.விஜய் என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com