மும்பையில் மாயமான எச்.டி.எஃப்.சி. வங்கி அதிகாரி சடலமாக மீட்பு

மும்பையில் மாயமான எச்.டி.எஃப்.சி. வங்கி அதிகாரி சடலமாக மீட்பு

மும்பையில் கடந்த 5-ஆம் தேதி மாயமான எச்.டி.எஃப்.சி., வங்கியின் துணைத் தலைவர் சிச்சாக்ச் சங்வி சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 


மும்பை: மும்பையில் கடந்த 5-ஆம் தேதி மாயமான எச்.டி.எஃப்.சி., வங்கியின் துணைத் தலைவர் சிச்சாக்ச் சங்வி சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

மும்பையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் எச்.டி.எஃப்.சி வங்கியின் துணைத் தலைவராக அண்மையில் பதவி உயர்வு பெற்றவர் சித்தார்த் சங்வி(38). இவர் தென் மும்பையில் உள்ள மலபார் ஹில் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கமலா மில்சில் உள்ள அலுவலகத்திற்கு கடந்த புதன்கிழமை காலை 7.30 மணிக்கு  (செப்.5) சென்றவர், பின்னர் மாயமானார்.

இதுகுறித்து அவரது மனைவி மத்திய மும்பை காவல்துறையில் அளித்த புகாரை அடுத்து, பல்வேறு காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டது.

விசாரணையை கமலா மில் வளாகத்தில் உள்ள ஹெச்.டி.எப்.சி. வங்கி அலுவலகத்தில் இருந்து தொடங்கிய போலீஸார், சித்தார்த் கிரண் சங்வி புதன்கிழமை இரவு சுமார் 7.30 மணியளவில் அலுவலகத்திலிருந்து கிளம்பியது தெரியவந்துள்ளது. ஆனால், சிசிடிவி கேமரா பதிவுகளை சோதித்ததில், அவரது கார் அலுவலகத்திலிருந்து சென்ற காட்சி எதுவும் பாதிவாகவில்லை.

இந்நிலையில் 3 நாட்களுக்குபின் சித்தார்த் சங்க்வியின் காரானது கோபர்கைரெய்ன் என்ற இடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. காரில் பின் இருக்கையில் ரத்தக் கறை படிந்து இருந்ததுடன், கத்தியும் கிடந்ததால் வழக்கு பரபரப்பானது. அந்தக் காரை சம்பவ இடத்தில் நிறுத்திச் சென்றது யார் என போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். 

இதனிடையே பெலாபூரைச் சேர்ந்த சர்ஃபராஸ் ஷேக்(20) என்பவர் போலீஸாரிடம் சிக்கினார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், ஹாஜி மலங் என்ற இடத்தில் சங்க்வியின் சடலம் மீட்கப்பட்டது. வங்கி அதிகாரி கொலை சம்பவம் குறித்து பல கோணத்தில் விசாரணை நடத்தி வரும் போலீஸார், வங்கியைச் சேர்ந்த 3 அதிகாரிகள் புரோக்கர்கள் மூலம் தன்னை தொடர்பு கொண்டதாகவும், அவர்கள் யார் என்பது தெரியாது. அவர்கள் சங்வியை கொலை செய்யுமாறு கூறிதால் நான் கொலை செய்து, அவரது காரில் கொண்டு சென்று கோபர்கைரனே என்ற பகுதியில் விட்டு சென்றுவிட்டேன் என்றவன் சித்தார்த் சங்வியை அலுவலகத்தின் கார் பார்க்கிங்கில் வைத்தே 3 பேர் கொலை செய்ததாகவும், சடலத்தை மறைக்கும் பொறுப்பு தம்மிடம் வழங்கப்பட்டதாகவும்,  பின்னர், கொள்ளை முயற்சியில் தானே கொலை செய்ததாகவும் வாக்குமூலங்களை முன்னுக்கு பின் முரணாக கூறி வருவதால் விசாரணையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

கொலை செய்யப்பட்டுள்ள சித்தார்த் சங்வி, தொழில் திறமையால் கடந்த 10 ஆண்டுகளில் மூன்று முறை பதவி உயர்வு பெற்றதே சங்கி கொல்லப்பட்டதற்கான முக்கிய காரணமாக கூறப்படுகிறது. மேலும், அவருடன் பணியாற்றி வந்த அதிகாரிகளின் பொறாமையால் மட்டுமே அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் அடைந்துள்ள போலீஸார், வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com