காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் தலைவராக ப.சிதம்பரம் நியமனம் 

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் தலைவராக முன்னாள் மத்திய ப.சிதம்பரமும், குழுவின் அமைப்பாளராக ராஜீவ் கவுடா
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் தலைவராக ப.சிதம்பரம் நியமனம் 


புதுதில்லி: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் தலைவராக முன்னாள் மத்திய ப.சிதம்பரமும், குழுவின் அமைப்பாளராக ராஜீவ் கவுடா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

இன்னும் 6 மாதத்தில் 2019 மக்களவைக்கு தேர்தல் வரவுள்ள உள்ள நிலையில், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியை காங்கிரஸ் தொடங்கி இருக்கின்றன. 

கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இந்த தேர்தலில் வலுவான வெற்றியைபெற வேண்டும் என்ற நோக்கத்தில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது காங்கிரஸ். 

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை மக்களை மிகவும் கவர வேண்டும் என்பது முக்கிய திட்டங்களில் ஒன்றாகும். இதற்காக சமீபத்தில் காங்கிரஸ் ஒருங்கிணைப்பு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு மற்றும் விளம்பரப்படுத்துதல் ஆகியவற்றுக்காக 3 குழுக்கள் கொண்ட தேர்தல் அறிக்கை குழுவை சமீபத்தில் அமைத்து உத்தரவிட்டிருந்தது. 

இந்த குழுவில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப. சிதம்பரம், சல்மான்குர்ஷித், ஜெயராம் ரமேஷ், குமாரி செல்ஜா, அரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர்சிங் பூடா, இளம் தலைவர்களான பஞ்சாப் முதல்வர் மான்பிரித் பாதல், மகிளா காங்கிரஸ் தலைவி சுஷ்மிதா தேவ், சச்சின்ராவ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மீனாட்சி நடராஜன் ஆகியோரும் இந்த குழுவில் இடம்பெற்றிருந்தனர். 

இந்த குழு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் கட்டுப்பாட்டில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கை மற்றும் விளம்பரப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுக்கள், ராகுல் காந்தி தலைமையில் செயல்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் தலைவராக முன்னாள் மத்திய ப.சிதம்பரமும், குழுவின் அமைப்பாளராக ராஜீவ் கவுடா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று அறிவித்துள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com