கிம் ஜோங் உன்னை சந்திக்க வடகொரியா வந்தடைந்தார் மூன் ஜே இன்

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை மூன்றாவது முறையாக சந்தித்து பேசுவதற்காக தென்கொரியா அதிபர் மூன் ஜே இன் பியாங்யாங்
கிம் ஜோங் உன்னை சந்திக்க வடகொரியா வந்தடைந்தார் மூன் ஜே இன்


சியோல்: வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை மூன்றாவது முறையாக சந்தித்து பேசுவதற்காக தென்கொரியா அதிபர் மூன் ஜே இன் பியாங்யாங் வந்தடைந்தார்.

தென்கொரிய அதிபர் மூன் ஜே இன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை மூன்றவாவது முறையாக சந்தித்து பேசுவதற்காக,  சியோல் விமான நிலையத்திலிருந்து காலை 8.40 மணியளவில் அதிபர் மூன் ஜே இன் தனி விமானம் புறப்பட்டு, பியாங்யாங் சர்வதேச விமான நிலையத்திற்கு காலை 9.50 மணியளவில் வந்தடைந்தார். தென்கொரியா அதிபர் மூன் ஜே இன்னை, வடகொரிய அதிபரின் சகோதரி கிம் யோ ஜாங், விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்பு அளித்தார். விமானநிலையத்தில் கூடியிருந்த வட கொரியா மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

உலகமே உற்றுநோக்கிய வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு கடந்த ஜூன் மாதம் சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - கிம் ஜோங்-உன்னுடன் நடைபெற்றது. 

அப்போது, கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்களற்ற பிரதேசமாக்குவது உள்ளிட்ட 4 அம்ச தீர்மானத்தில் இரு தலைவர்களும் கையெழுத்திட்டனர்.

எனினும், அந்த ஒப்பந்த அம்சங்ககளை நிறைவேற்றுவதில் வட கொரியா முனைப்பு காட்டவில்லை என்று அமெரிக்காவும், இந்த விவகாரத்தில் அமெரிக்கா மிரட்டல் பாணியை கையாள்வதாக வட கொரியாவும் ஒன்றின் மீது ஒன்று குற்றம் சாட்டி வந்ததால், இந்த விவகாரத்தில் இழுபறி நீடித்து வருகிறது.

இந்நிலையில், தென்கொரிய அதிபர் மூன் ஜே இன், தனது மனைவி மற்றும் முக்கிய தொழிலதிபர்கள் உள்ளிட்ட 110 உயர்மட்ட குழுவினருடன் வடகொரியா வந்துள்ளார். 

இரு நாட்டு தலைவர்களின் மூன்று நாட்கள் சந்திப்பின் போது, கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்களற்ற பிரதேசமாக்கும் விவகாரத்தில் முக்கிய திருப்பு முனையை ஏற்படுத்தும் வகையில் இவர்களின் சந்திப்பு அமையும் இருக்கும் என்றும் அணு ஆயுதங்களைக் கைவிடும் வட கொரியாவின் நடவடிக்கைகளை அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டு செல்வது, அதற்குப் பதிலாக வட கொரியாவுக்கு அமெரிக்கா அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவது ஆகிவை குறித்து இரு தலைவர்களும் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கொரிய நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இவர்களின் பேச்சுவார்த்தை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com