அதிமுக அரசியல் கட்சி இல்லை அது ரசிகர் மன்றம்!: பாமக நிறுவனர் ராமதாஸ்

ஒரு காலத்தில் ‘விசிலடிச்சான் குஞ்சுகள்’ என கருணாநிதியால் அதிமுக தொண்டர்கள் கேலிக்கு ஆளாகியிருக்கிறார்கள். ஆனால் அந்தக் கேலியை திரும்பப் பெற்றுக் கொள்ளும் அளவுக்கு இன்று சுமார் ஒன்றரைக் கோடி தொண்டர்களை
அதிமுக அரசியல் கட்சி இல்லை அது ரசிகர் மன்றம்!: பாமக நிறுவனர் ராமதாஸ்

சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசுகையில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் அதிமுக ஒரு அரசியல் கட்சியே இல்லை. அது எம்.ஜி.ஆர் காலம் தொட்டே ரசிகர் மன்றமாகத் தான் செயல்படுகிறது என்று கேலியாகக் குறிப்பிட்டார். ராமதாஸால் மட்டும் அல்ல பலமுறை கலைஞர் கருணாநிதியாலும், இன்ன பிற இதர கட்சிகளாலும், அதிமுகவும் அதன் நிறுவனர் எம்.ஜி.ஆரும், அவருக்குப் பின் வந்த ஜெயலலிதாவும், அக்கட்சியின் தொண்டர்களும் இப்படிப்பட்ட கேலிகளுக்கும், கிண்டலுக்கும் ஆளாகியிருக்கின்றனர். இது தொடர்பாகக் தங்களது கட்சி சார்பில் அதிமுக வைச் சார்ந்த அமைச்சர் மாபா. பாண்டியராஜன் கருத்து தெரிவிக்கையில்;
“அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது எம்.ஜி.ஆர் தொடங்கிய காலத்தில் அவரது எண்ணற்ற ரசிகர்களின் ஆதரவில் வளர்ந்த கட்சி என்பதில் எந்த விதமான மாற்றுக் கருத்தும் இல்லை. ஒரு காலத்தில் ‘விசிலடிச்சான் குஞ்சுகள்’ என கருணாநிதியால் அதிமுக தொண்டர்கள் கேலிக்கு ஆளாகியிருக்கிறார்கள். ஆனால் அந்தக் கேலியை திரும்பப் பெற்றுக் கொள்ளும் அளவுக்கு இன்று சுமார் ஒன்றரைக் கோடி தொண்டர்களைப் பெற்று அதிமுக மக்களிடையே தனது செல்வாக்கை நிரூபித்து விட்டது. இந்த நிலையில் கட்சி அடையாளத்தையே இழக்கப் போகும் நிலையில் உள்ள பாமகவுக்கு அதிமுகவை அரசியல் கட்சி இல்லை என்றும் அது வெறும் ரசிகர் மன்றம் தான் என்று சொல்லும் தகுதி இல்லை. என்று குறிப்பிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com