‘நோ ஸ்மோக்கிங்’ விளம்பரங்களில் வரும் இந்தக் குட்டிப் பெண்ணை நினைவிருக்கிறதா?

அந்தக் குட்டிப் பெண்ணின் நிஜப் பெயர் சிம்ரன் நடேகர். மும்பையில் பிறந்தவரான சிம்ரன் 2002 ஆம் ஆண்டிலிருந்து குழந்தை நட்சத்திரமாக விளம்பரங்களில் நடிக்கத் தொடங்கி
‘நோ ஸ்மோக்கிங்’ விளம்பரங்களில் வரும் இந்தக் குட்டிப் பெண்ணை நினைவிருக்கிறதா?

நீங்கள் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, தனுஷ் யார் படத்துக்கு வேண்டுமானாலும் போயிருக்கலாம்... யாருடைய ரசிகராகவும் இருக்கலாம். அது ஒரு பொருட்டே இல்லை. ஆனால் தியேட்டருக்குள் நுழைந்ததும் திரையில் முதலில் நீங்கள் தரிஷிக்கப் போவது உங்களுடைய சூப்பர், சுப்ரீம், அல்டிமேட் ஸ்டார்களின் முகங்களை அல்ல. தியேட்டர் ஸ்கிரீனில் முதலில் ஒளிபரப்பப்படுவது அரசின் நோ ஸ்மோக்கிங் விளம்பரமே! அந்த விளம்பரத்தில் வரும் குட்டிப் பெண்ணின் முகத்தை அத்தனை சீக்கிரம் யாராலும் மறந்து விட முடியாது. 

அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும் அப்பா, மாலையில் மகளுடன் அமர்ந்து டி.வி பார்த்துக் கொண்டிருப்பார் அப்போது கையில் சிகரெட் புகைந்து கொண்டிருக்கும், டி.வி திரையில் ‘ஸ்மோக்கிங் இஸ் இஞ்சூரியஸ் டு ஹெல்த்’  விளம்பரத்தில் ஒரு நோயாளி இருமித் துடிப்பார். அதைக் காணும் மகளது முகம் சுருங்கி ஏக்கத்துடன் அப்பாவின் முகத்தை ஏறிடும். உடனே நாள் முழுக்க சிகரெட்டை இன்னொரு விரல் போல பாவித்து கை விடாமல் பிடித்துக் கொண்டிருந்த அந்த அப்பா சட்டென அதை உதறி விடுவார். இது தான் அந்த அரசு விளம்பரம். இதைப் பார்க்காதோர் தியேட்டரையே எட்டிப் பார்க்க வாய்ப்பில்லாதோர் என்று அர்த்தம். வாரம் தவறாது வெள்ளி விட்டு வெள்ளி தியேட்டர்களுக்குப் படையெடுப்பவர்கள் அனைவருமே ரஜினி, கமல் போலவே இந்தக்க் குட்டிப் பெண்ணிற்கும் கூட ரசிகர்களாகி இருக்க 99% வாய்ப்புகள் உண்டு. ஏனெனில் அத்தனை முறை தவிர்க்கவே முடியாமல் இந்த விளம்பரம் நமது கண்ணிலும் பட்டிருக்கிறது.

அதெல்லாம் சரி, ஆனால் வருடங்கள் உருண்டு கொண்டிருக்கையில் அந்தக் குட்டிப் பெண் அப்படியே இருக்க வாய்ப்பில்லை தானே! அவர் இப்போது வளர்ந்து 19 வயது இளம்பெண் ஆகி விட்டார். 

அந்தக் குட்டிப் பெண்ணின் நிஜப் பெயர் சிம்ரன் நடேகர். மும்பையில் பிறந்தவரான சிம்ரன் 2002 ஆம் ஆண்டிலிருந்து குழந்தை நட்சத்திரமாக விளம்பரங்களில் நடிக்கத் தொடங்கி தற்போது தனது வாழ்க்கைப் பயணத்தை திரும்பிப் பார்க்க கூட நேரமில்லாதவாறு உணவுத் தயாரிப்புத்துறை சார்ந்த பெரு நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிக்க தொடர்ச்சியாக ஒப்ந்தமாகிக் கொண்டிருக்கிறார். 

எப்போதாவது இந்தி சினிமாக்களிலும் முகம் காட்டும் சிம்ரன், டொமினோஸ் பீட்ஸா, கெல்லாக்ஸ் கார்ன் ஃபிளாக்ஸ், யாகல்ட் மில்க் ட்ரிங், விடியோகான் எலெக்ட்ரானிக்ஸ், கிளினிக் பிளஸ் ஷாம்பூ, பார்பி பொம்மை விளம்பரங்கள், உள்ளிட்ட பெரு நிறுவனங்களின் விளம்பரங்களில் தான் பிரதானமாக நடித்துக் கொண்டிருக்கிறார். இது மட்டுமல்ல குழந்தைகளுக்கான டி.வி ஷோ வான ‘ஷுயூட் லைஃப் ஆஃப் கரண் அண்ட் கபீர்’ எனும் பிரபலத் தொடரில் சஹானா எனும் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். டிஸ்னி சேனலின் பிரபல காமெடித் தொடரான ஓயே ஜஸிக்கான்’ ல் மின்னி ராயாக வருவதும் இவர் தான்.

விளம்பரங்கள் மட்டுமல்ல சமூக வலைத்தளங்களிலும் சிம்ரன் நடேகர் சுறுசுறுப்பாகத் தான் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு வருகிறார் என்பதை குறுகிய காலத்தில் 17000 ஃபாலோயர்களைப் பெற்றிருக்கும் அவரது இன்ஸ்டாகிராம் கணக்கு சுட்டுகிறது.

நாம் ரசித்த நம்ம ஊர் பேபி ஷாலினி, பேனி ஷாம்லிக்கள் தான் அதிகம் படங்களில் நடிக்கவில்லை, அட விளம்பரத்தில் ரசித்த இந்தக் குட்டிப் பெண்ணாவது பெரிய நடிகையாகட்டும் என வாழ்த்துவோம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com