எனது சகோதரனின் கொலைக்கான காரணம் எங்களுக்கு மட்டுமல்ல, இங்கிருக்கும் யாருக்குமே தெரியவில்லை!

இவ்வழக்கில் குற்றவாளி கண்டுபிடிக்கப் பட்டால் மட்டுமே இது அமெரிக்க நிறவெறியர்களால் நிகழ்த்தப் பட்ட கொலையா? இல்லையா? என்ற கேள்விக்கு விடை கிடைக்கும்.
எனது சகோதரனின் கொலைக்கான காரணம் எங்களுக்கு மட்டுமல்ல, இங்கிருக்கும் யாருக்குமே தெரியவில்லை!

அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப் பட்ட குஜராத்தைச் சேர்ந்த இளம் வியாபாரி ஹர்னிஷ் படேலின் மனைவி சோனல் படேல், லன்காஸ்டர் உள்ளூர் நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ‘ தன் கணவர் சுயநலமற்ற அன்பை’ தன்னைச் சுற்றியிருந்தவர்களுக்கு தரத் தயங்காதவர் என்பதால் அவரது மரணத்துக்கு அஞ்சலி செலுத்த விரும்புபவர்கள் அவரைப் போலவே தன்னைச் சார்ந்தவர்களுக்கும் நண்பர்களுக்கும் தன்னலமற்ற அன்பையும், நட்பையும் எப்போதும் அளிக்கத் தயங்காதவர்களாக இருந்தாலே போதும். அதுவே அவருக்கான மிகச் சிறந்த அஞ்சலியாக இருக்கும். எனத் மன்றாடிக் கேட்டுக் கொண்டிருக்கிறார். 

ஹர்னிஷ் படேலின் சகோதரர் நீரவ், தனது அண்ணியான சோனல் மன வலிமை மிக்கவர் என்றும், தனது சகோதரர் சுட்டுக் கொல்லப்பட்டு, அதற்கான காரணங்கள் இன்னும் கண்டறியப்படாத நிலையில், தன் மகனுக்காக, சோனல் தனது துயரத்தை அடக்கிக் கொண்டு இயல்பு நிலைக்கு விரைவில்  மீண்டு வருவார் எனத் தான் நம்புவதாகத் தெரிவித்திருக்கிறார்.

2003 ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்த ஹர்னிஷ் படேல் லன்காஸ்டரில் வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வந்தார். சம்பவம் நடந்த மார்ச் 2 அன்று கடையிலிருந்து தனது வீட்டுக்கு திரும்பிச் செல்லும் வழியில் அடையாளம் தெரியாத மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது கொலைக்கான காரணங்களோ, கொலை செய்த நபர்களைப் பற்றிய விவரங்களோ எதுவும் இப்போது வரை கண்டுபிடிக்கப் படவில்லை.

இதைப் பற்றிய கேள்விக்கு ஹர்னிஷ் படேலின் சகோதரர் நீரவ் செய்தியாளர்களுக்கு அளித்த பதிலில்; ஹர்னிஷின் குடும்பம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த நட்புடன் பழகி வந்தது. அவர்களுக்கு அங்கு யாருடனும் பகை இல்லை. எதிரிகள் இல்லை. சுற்றியுள்ள மனிதர்களிடம் நட்பையும் அன்பையும் மட்டுமே வெளிப்படுத்தி வந்த தனது சகோதரனின் கொலைக்கான காரணங்கள் என்னவாக இருக்குமென்று எங்களுக்கு மட்டுமல்ல இங்கிருக்கும் யாருக்குமே எதுவும் தெரியவில்லை.

இங்கிருக்கும் சட்ட அமலாக்கச் சமூகத்தின் மீது ஹர்னிஷ் குடும்பம் எப்போதுமே நட்பாகவே இருந்திருக்கிறது. இப்போதும் கொலைக்கான காரணத்தையும், கொலைகாரர்களையும் சட்டம் வெகு விரைவில் கண்டுபிடிக்கும் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையில் லன்காஸ்டர், ஷெரிஃப் அலுவலக வழக்குரைஞரான டஃப் பார்ஃபீல்ட், ஹர்னிஷ் கொலைக்காக இதுவரை பல்வேறு நபர்கள் விசாரிக்கப் பட்டிருப்பதாகவும், மாநில சட்ட அமலாக்க ஏஜன்ஸி மூலமாக அமைக்கப்பட்ட தனிக் குழு மூலம் இவ்வழக்கு முழு வீச்சில் விசாரிக்கப் பட்டுக் கொண்டு இருக்கப் படுவதாகவும், கூடிய விரைவில் ஹர்னிஷ் படேலை சுட்டுக் கொன்றவர்கள் சட்டத்தின் கையில் சிக்குவார்கள் என்றும் தெரிவித்திருக்கிறார்.
இவ்வழக்கில் குற்றவாளி கண்டுபிடிக்கப் பட்டால் மட்டுமே இது அமெரிக்க நிறவெறியர்களால் நிகழ்த்தப் பட்ட கொலையா? இல்லையா? என்ற கேள்விக்கு விடை கிடைக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com