ஓரினச் சேர்க்கையாளர்களும், லெஸ்பியன்களும் பணியிடத்தில் தலைமைப் பொறுப்பை அடைய குறைந்த வாய்ப்புகளே உள்ளன!

கே, லெஸ்பியன்களை அவர்களது முகமோ, நடை உடை, பாவனையோ காட்டிக் கொடுப்பதைக் காட்டிலும் அவர்களது குரலே முதன்மையாகக் காட்டித் தரவல்லது என பிரிட்டனில் இயங்கும் சர்ரே பல்கலைக் கழக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்ற
ஓரினச் சேர்க்கையாளர்களும், லெஸ்பியன்களும் பணியிடத்தில் தலைமைப் பொறுப்பை அடைய குறைந்த வாய்ப்புகளே உள்ளன!

இந்தியாவில் இப்போதும் ஓரினச் சேர்க்கையாளர்கள் மற்றும் லெஸ்பியன்கள் அதிகாரப் பூர்வமான அங்கீகாரம் பெறவில்லை எனினும் அவர்களும் இந்த உலகில் சக மனிதர்களோடு மனிதர்களாக சேர்ந்தே தான் வாழ்ந்து வருகிறார்கள். பிற நாடுகளை விட இந்தியாவில் அவர்களுக்கான சமூக அங்கீகரிப்பு மிகவும் குறைவு. ஆனாலும் ஓரினச் சேர்க்கையாளர்களை அங்கீகரிக்கும் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளிலும் கூட அவர்களுக்கான வேலைவாய்ப்புகள் வழங்கப் படுவதில் இப்போதும் கூட பாரபட்சம் நிலவுகிறது என்பது சற்று ஆச்சரியமான செய்தி. 

கே, லெஸ்பியன்களை அவர்களது முகமோ, நடை உடை, பாவனையோ காட்டிக் கொடுப்பதைக் காட்டிலும் அவர்களது குரலே முதன்மையாகக் காட்டித் தரவல்லது என பிரிட்டனில் இயங்கும் சர்ரே பல்கலைக் கழக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த ஆய்வு முடிவுகளின் படி; வேலைக்காக நேர்முகத் தேர்வுகளில் பங்கேற்கும் ஓரினச் சேர்க்கையாளர்களை அவர்களது குரல் மாடுலேஷனை வைத்தே அடையாளம் காணும் தேர்வு அதிகாரிகள் வேலைக்காக அவர்களைத் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் ஊதிய நிர்ணயம் மற்றும் தலைமைப் பொறுப்பு நிர்ணயம் உள்ளிட்ட விசயங்களில் கடும் பாரபட்சத்துடன் செயல்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது. 

அதோடு ஓரினச் சேர்க்கையாளர்களிலும் கூட பெண்ணியத் தன்மையுடன் கூடிய தங்களுடைய சக பார்ட்னர்கள் ஆணியத் தன்மை உடையவர்களைக் காட்டிலும் குறைவாகவே மதிப்பிடப் படுகிறார்கள். அந்த மதிப்பீடு வேலைக்கான அவர்களது நேர்முகத் தேர்வு வரையிலும் எதிரொலிக்கிறது எனவும் ஆய்வு முடிவு கூறுகிறது. ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்த மக்களது இந்த பொது மனப்பான்மையும், பாரபட்சமும் கல்வி மற்றும் தொழில்நுட்பப் பணிகளில் சிறந்து விளங்கும் ஓரினச்சேர்க்கையாளர்களின் திறமையை குறைத்து மதிப்பிடுவதோடு அவர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய உரிமைகளையும் மறுதலிப்பதாக இருக்கிறது. எனவும் பல்கலைக் கழக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

சமூகத்தில் மக்கள் மனதில் அறிந்தும், அறியாமலும் புரையோடிப் போயிருக்கும் பாலினப் பாகுபாட்டின் எல்லை ஓரினச்சேர்க்கையாளர்களைப் புண்படுத்துவதாக உள்ளது. பாலினப் பாகுபாடு விசயத்தில் உலக நாடுகள் பல புரட்சிகரமான எல்லைகளை கடந்து வந்திருந்தாலும் கூட இப்போதும் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு என தனித்த பாரப்ட்சங்கள் பல இடங்களிலும் நிலவி வருகின்றன. இதைக் களைந்தால் ஒழிய அவர்களுக்கான சுதந்திரத்தையும் , சமத்துவத்தையும் பெற்றுத் தந்ததில் எவ்வித பலனும் இருப்பதாக அர்த்தம் கொள்ள முடியாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com