அறிவுக்கூர்மை போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் முதலிடம்!

‘மென்ஸா’ எனும் அறிவுக் கூர்மை சோதனைப் போட்டியில் இந்திய வம்சாவளியைச்
அறிவுக்கூர்மை போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் முதலிடம்!

‘மென்ஸா’ எனும் அறிவுக் கூர்மை சோதனைப் போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர் துருவ் கார்க் முதலிடம் பெற்றுள்ளார். 

பொது அறிவுத் திறனை மதிப்பிடும் உலகின் மிகப் பழமையான ‘மென்ஸா’ நிறுவனம் நடத்திய அறிவுக்கூர்மை  போட்டியில் 13 வயது நிரம்பிய இந்திய வம்சாவளி மாணவன் துருவ் கார்க் பங்கு பெற்றார். ஐக்யூ தொடர்பாக தனக்கு அளிக்கப்பட்ட மிகக் கடினமான 150 கேள்விகளுக்கும் வெகு சுலபமாக பதில் அளித்து 162 புள்ளிகளைப் பெற்றார். உலக அறிவியல் மேதைகளான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங்கை விட இரண்டு மதிப்பெண்கள் அதிகம் பெற்றுள்ளார் துருவ்.

இதே பிரிவின் கல்சர் ஃபேர் ஸ்கேல் (Culture Fair scale) எனும் இரண்டாம் போட்டியிலும் அவர் பங்கு பெற்று அதிலும் அதிக மதிப்பெண்களான 152 ஐ.க்யூ புள்ளிகளைப் பெற்றுள்ளார். இதன்மூலம், உலகில் இந்த இரண்டு போட்டிகளிலும் ஒரே நேரத்தில் பங்குபெறும் ஒரு சதவிகித மக்களில் ஒருவராகத் திகழ்கிறார் துருவ். அதிலும் இரண்டு போட்டிகளிலும் அதிக மதிப்பெண்கள் பெற்றது சிறப்பானது. லண்டனில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைத் சேர்ந்த திவ்யா என்பவரின் மகனான துருவுக்கு கணக்கு மற்றும் வேதியல் விருப்பத்துக்குரிய பாடங்கள். கிரிக்கெட் மற்றும் டேபிள் டென்னிஸ் விளையாட்டுகளிலும் ஆர்வம் உடைய துருவ் மென்ஸா வெற்றி குறித்து கூறுகையில், சம்மர் லீவ் என்பதால் இந்தப் போட்டியில் கலந்து கொண்டதாகவும், இந்தளவுக்கு மதிப்பெண்களை எடுப்பேன் என்று எதிர்ப்பார்க்கவில்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com