அமெரிக்க நூலகத்தில் தமிழக மருத்துவரின் நூல்!

சென்னையிலுள்ள முக்கிய விஐபி-களின் மருத்துவ ஆலோசகரும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக முன்னாள் செனட் உறுப்பினருமான டாக்டர் எஸ். அமுதகுமார், சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்தார்.

அப்போது டெக்சாஸ் மாகாணத்திலுள்ள பியர்லேண்ட் நகர மேயர் டாம் ரெய்ட்டைச் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின்போது, தான் எழுதிய 6 மருத்துவ புத்தகங்களையும் மேயரின் பெயரிலுள்ள 'டாம் ரெய்ட் நூலகத்துக்கு வழங்கி, அவரிடம் வாழ்த்து பெற்றார்.

அந்தப் புத்தகங்களை வாங்கி பார்த்த டாம், அந்த புத்தகங்களின் உள்ளடக்க விவரங்களை அறிந்து, அவற்றை எழுதிய டாக்டர் அமுதகுமாரை பாராட்டியதோடு, இனிவரும் நாட்களில் தமிழ், இந்தி, குஜராத்தி உள்ளிட்ட இந்திய மொழி புத்தகங்கள் தமது பெயரில் உள்ள நூலகத்தில் வைக்கப்படும் என்ற உறுதியையும் அளித்தார்.

இதனால் தமிழ் உள்ளிட்ட மேற்கூறிய மொழிகளின் புத்தகங்கள் அமெரிக்க நூலகம் ஒன்றில் இடம்பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பியர்லேண்ட் நகர மேயரின் பதவிக் காலம் இரண்டாண்டுகள். இந்நிலையில் 92 வயதாகும் டாம், தொடர்ந்து 46 ஆண்டு காலமாக பியர்லேண்ட் நகர மேயராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com