அரியலூர் புத்தகத் திருவிழா!

மூன்றாம் ஆண்டாக ஜூலை 14 முதல் ஜூலை 23 வரை  (பத்து நாட்கள்), அரியலூர் அரசு
அரியலூர் புத்தகத் திருவிழா!

மூன்றாம் ஆண்டு அரியலூர்ப் புத்தகத் திருவிழா  ஜூலை 14 முதல் ஜூலை 23 வரை  (பத்து நாட்கள்), அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டுத் திடலில் நடைபெறும்.

மாணவக் கல்வி மேம்பாட்டினை கருத்திற்கொண்டு மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப் பல்வேறு தரப்பினரிடையேயும் புத்தக வாசிப்பு குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கில் அரியலூர் மாவட்ட ஆட்சியரகம், தென்னிந்தியப் புத்தக வெளியீட்டாளர் விற்பனையாளர் சங்கம் ஆகியோரின் உறுதுணையுடன் அரியலூர் மாவட்டத் தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பின் சார்பில் பேரளவிலான புத்தகத் திருவிழா ஒன்றினை பத்து நாட்களுக்கு 2017 சூலை 14 முதல் 23 வரை அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டுத் திடலில் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. நூற்றிற்கும் மேற்பட்ட புத்தகக் கடைகள், அறிவிற்கு விருந்தளிக்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் விழாவில் இடம் பெறுகின்றன. பல்வேறு அரசியல் தலைவர்கள், தொழில்துறை வல்லுநர்கள், அறிஞர் பெருமக்கள், கலைஞர்கள் வருகை தந்து சிறப்பிக்க உள்ளனர்.

தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித் துறையின் மாண்புமிகு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் புத்தகத் திருவிழாவினைத் தொடங்கி வைக்க இசைந்துள்ளார். தமிழ்நாடு அரசின் மாண்புமிகு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் அவர்கள் தலைமை தாங்குகிறார்.

விழா சீரும் சிறப்புமாக நடைபெறப் பொதுமக்கள், கல்வி நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு அமைப்புகள், வணிகக் குழுமங்கள், வங்கிகள், மருத்துவர்கள், செய்தி ஊடகத் துறையினர், நூலகத் துறையினர் எனப் பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்பினை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறோம். பெரும் பொருட் செலவினை உட்கொண்ட இவ்விழாவிற்குப் பெரும் அளவிலான நன்கொடையை நல்கி உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்

நன்றி

அன்புடன்

விழாக் குழுவினர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com