Knappily - இந்தியாவிலிருந்து Google Editors' Choice-ல் இடம்பிடித்த ஒரே செயலி!

சமூக வலைத்தளங்களில் நொடிக்கு நொடி நாட்டுநடப்புகள், நிறைய கருத்துகள், பல இடங்களிலிருந்து எடுக்கப்பட்ட தகவல்கள் பகிரப்படுகின்றன.
Knappily - இந்தியாவிலிருந்து Google Editors' Choice-ல் இடம்பிடித்த ஒரே செயலி!

Knappily செயலி உருவாக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. Google Playstore-ல் மிக உயர் மதிப்பு தரப்பட்ட செய்திப் பயன்பாடுகளில் Knappily-யும் ஒன்று. சமீபத்தில், Google Playstore உலகின் முதல் ஐந்து செய்திப் பயன்பாடுகளில் ஒன்றாக Knappily-ஐ அங்கீகரித்துள்ளது. இந்தப் பிரிவில், இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே செயலி Knappily மட்டுமே!

‘இந்த அதிவேக உலகில் யார்தான் வாசிக்க விரும்புவர்?’ - Knappily தொடங்கியபோது அனைவராலும் கேட்கப்பட்ட கேள்வி. அந்த கேள்விக்கான விடையாகவே, Knappily இப்பொழுது நம்மிடையே வளர்ந்து நிற்கிறது. அதிகமாகத் தெரிந்துகொள்ளலாம் என்ற நம்பிக்கையைக் கொடுத்தால், எல்லோரும் அதிகமாகவே படிப்பார்கள். உண்மையைக் கூற வேண்டுமானால், இந்த அதிவிரைவு உலகில், உலகைப் பற்றி அன்றாடம் தெரிந்து புரிந்துகொள்ள, அனைவரும் உபயோகப்படுத்த வேண்டியது Knappily போன்ற ஒன்று மட்டுமே.

ஏன் ஒருவர் Knappily-யை உபயோக படுத்தவேண்டும்?

சமூக வலைத்தளங்களில் நொடிக்கு நொடி நாட்டுநடப்புகள், நிறைய கருத்துகள், பல இடங்களிலிருந்து எடுக்கப்பட்ட தகவல்கள் பகிரப்படுகின்றன. நேரப் பற்றாக்குறை காரணமாக சிலர் அதை ஆராயாமல் நம்புகிறார்கள். வேறு சிலரோ, நம்பகமான platform இல்லாத காரணத்தால், எதை நம்புவது என்று புரியாமல் குழப்பத்தில் தவிக்கின்றனர். இந்தக் குழப்பத்துக்குப் பதில் தரும் விதமாக, Knappily செய்தி மற்றும் அது கடந்து வந்த பாதையையும் சேர்த்தே நம்மிடம் ஒரே மேடையில் பகிர்கிறது. தற்கால நிகழ்வுகளில் ஒன்றான காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை எடுத்துக்காட்டாகக் கொண்டு இதைப் புரிந்துகொள்வோம். சிலர் காவிரி ஆணையம் அமைய போராடினர் மற்றும் சிலர் போராட்டத்தை விமரிசித்தனர். பலரோ என்ன செய்வது என்று ஒரு முடிவெடுக்கும் முன்னரே, சென்னையில் நடைபெற வேண்டிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் புணேவுக்கு மாற்றப்பட்டுவிட்டது. காவிரி பிரச்னை எப்படி ஆரம்பித்தது? உச்ச நீதிமன்றம் காவிரிக்காக என்ன தீர்ப்பு வழங்கியது? காவிரி ஆணையம் அமைத்தால் தீர்வு வருமா? இந்தக் கேள்விகளுக்கான பதில், நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். நாம் ஒரு நடப்பை புரிந்துகொள்ளும்முன் அதற்குத் தகுந்த கேள்விகள் எழுப்பி சரியான விடைகள் என்ன என்று ஆராய வேண்டும். அந்தத் தேடல்களுக்கு விடையாகவே Knappily உள்ளது.

Knappily-யில் -5W +1H என்ற என்ன, ஏன், எப்பொழுது, எங்கே, யார் மற்றும் எப்படி ஆகிய கேள்விகள் மூலமாக ஒவ்வொரு செய்தியும் அலசப்படுகிறது.

‘ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுத்து, அதை ஆழமாகப் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து, பின்னர் எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடிய, படிக்கக்கூடிய வடிவத்தில் அமைத்து தருகிறோம்’ என்கிறார் Knappily-யின் நிறுவனர்களில் ஒருவரான ரஞ்சித் குமார். ‘முதலில் Knappily செயலியை உங்கள் ஸ்மார்ட் போனில் டவுன்லோடு செய்யுங்கள். பிறகு எனக்கு நன்றி சொல்லலாம்’ என்கிறார் சிரித்த முகத்துடன்.

தற்பொழுது Knappily ஆங்கிலத்தில் மட்டும் இருந்தாலும், கூடிய விரைவில் தமிழிலும் தொகுப்புகள் இடம்பெற உள்ளது. இந்த அவசர உலகத்தில் படிப்பதற்கு பொறுமை இல்லாத இந்தச் சூழ்நிலையில், Knappily ஒரு விடிவிளக்கு என்று சொன்னால் மிகையாகாது.

செய்திகளை அதிகம் தெரிந்துகொள்வோம், முழுமையாகப் புரிந்துகொள்வோம். Download Knappily

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com