உங்கள் முகம் மிருதுவாக என்ன செய்ய வேண்டும்?

அலோவேரா எனப்படும் கற்றாழை பல வீடுகளில் தொட்டிகளில் வளர்க்கப்படும் எளிய தாவரம்.
உங்கள் முகம் மிருதுவாக என்ன செய்ய வேண்டும்?

அலோவேரா எனப்படும் கற்றாழை பல வீடுகளில் தொட்டிகளில் வளர்க்கப்படும் எளிய தாவரம். கண் திருஷ்டி, தீய சக்திகளை எதிர்க்கும் ஆற்றல் பெற்றது என்ற நம்பிக்கை இன்றும் கிராமப்புறங்களில் உள்ளது. பலவிதமான நன்மைகளை கற்றாழை தரும் என்பது உண்மைதான். அதிலும் குறிப்பாக, உடல் ஆரோக்கத்துக்கு மட்டுமல்லாமல் சருமம் பராமரிப்புக்கு சிறந்த மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது கற்றாழை. 

உடலில் அதிகமான அமிலம் சுரப்பதால் ஏற்படும் வாயுத்தொல்லை, வயிறு உப்புசம் போன்றவை குணமாக கற்றாழை ஜூஸ் உதவுகிறது.

வயிற்று வலி, நெஞ்சு எரிச்சல் போன்றவற்றையும் குணப்படுத்துகிறது. கல்லீரல் பிரச்னைகளுக்கு கற்றாழை மிகவும் நல்லது.

கற்றாழை மடலைக் கீறி உள்ளே இருக்கும் தசைப் பாகத்தை எடுத்து முகத்தில் பூசினால் முகம் மிருதுவாகும்; சுருக்கங்கள் மறையும். 

இந்த அதிசயத் தாவரம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைச் சீராக வைக்கவும், அதிகப்படியான கலோரிகளைக் குறைத்து ரத்த ஓட்டத்தைச் சீராக்கி உடலை ஆரோக்கியமாக வைக்கவும் உதவும்.

***

பீட்ரூட், ஆப்பிள், கேரட், இஞ்சி, லெட்யூஸ் எனும் கீரை ஆகியவற்றை அரைத்து பழரசமாக்கி ஒரு தம்ளர் குடிப்பதன் மூலம் உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான வைட்டமின் பி, சி மற்றும் கரோட்டின், ஆகிய சத்துகள் கிடைக்கும்.  உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளும் உடனடியாகக் கிடைக்கும். உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளும் உடனடியாகக் கிடைக்கும்.

இந்தப் பழரசத்தை தினமும் ஒருவேளை குடிப்பதால் உடல் புத்துணர்ச்சி பெறுவதுடன், முகம் பொலிவடைந்து சருமம் பளபளப்பாகும். உணவு எளிதில் ஜீரணமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com