ஜலக்கிரீடை... பார்வை தெளிவுற, முகம் பொலிவுற முழு எண்ணெய் குளியல் செய்வதெப்படி?

எண்ணெய் குளியல் செய்து கொள்ளும் நாட்களில் காலையில் இளஞ்சூரியன் உதிக்கையில் தொடங்கலாம். ஆண்கள் எனில் வீட்டின் திறந்த முற்றங்கள் அல்லது சூரிய ஒளி படக்கூடிய இடமாகப் பார்த்து
ஜலக்கிரீடை... பார்வை தெளிவுற, முகம் பொலிவுற முழு எண்ணெய் குளியல் செய்வதெப்படி?

நம் முன்னோர் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கென்றே சில வரயறைகளை வைத்துள்ளனர். அதன் படி ஆண்களென்றால் புதனும், சனியும் எண்ணெய் முழுக்குப் போடலாம். பெண்கள் என்றால் செவ்வாயும், சனியும் எண்ணெய்க் குளியல் செய்யலாம். எண்ணெய் என்றால் எல்லா எண்ணெய்களிலும் கிடையாது குளியலுக்கென்றால் எப்போதும் அது நல்லெண்ணெயில் மட்டுமே தான்! ஏனெனில் நல்லெண்ணெய் சூட்டைத் தணிக்கும் என்பதால். இந்தியா போன்ற பூமத்திய ரேகைக்கு அருகிலிருக்கும் நாட்டில் மக்களுக்கு உஷ்ணப் பிரச்னைகள் பல வரும், போகும். அதைத் தவிர்க்கத் தான் பன்னெடுங்காலமாக நமது மக்களின் வாழ்க்கைமுறையில் இப்படி ஒரு வழிமுறை பின்பற்றப் பட்டு வந்திருக்கிறது.

தேவையான பொருட்கள்:

நல்லெண்ணெய்:  4 டேபிள் ஸ்பூன் (ஆண்களுக்கு), 6 முதல் 7 டேபிள் ஸ்பூன் (பெண்களுக்கு)
பூண்டு: 3 பல்
மிளகு: 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் ஸ்டவ்வைப் பற்ற வைத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் முதலில் மிளகைப் போடவும், மிளகு பொறிந்து மேலே மிதந்ததும் அதைக் கருக விடாமல் ஸ்டவ்வை சிம்மில் வைத்து பூண்டை எண்ணெயில் சேர்க்கவும், பூண்டு பொன்னிறமாக வதங்கியதும் எண்ணெயை அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைக்கவும். பூண்டு இஷ்டம் எனில் வதங்கிய பூண்டை எடுத்துச் சாப்பிடு விடலாம். மிளகையும் தனியே எடுத்து வைத்து சமைக்குப் போது வேறு எதிலாவது சேர்த்துக் கொள்ளலாம். எண்ணெய் குளியல் செய்ய நல்லெண்ணெய் காய வைக்கும் போது ஏன் இவற்றை சேர்க்க வேண்டும் எனில் எண்ணெயின் அதீத குளிர்ச்சியை இது முறிக்கும் என்பது ஐதீகம்! சரி இனி ஜலக்கிரீடை எப்படிச் செய்யலாம் என்று பார்ப்போம்...

எண்ணெய் குளியல் செய்து கொள்ளும் நாட்களில் காலையில் இளஞ்சூரியன் உதிக்கையில் தொடங்கலாம். ஆண்கள் எனில் வீட்டின் திறந்த முற்றங்கள் அல்லது சூரிய ஒளி படக்கூடிய இடமாகப் பார்த்து வெறும் கெளபீனத்துடன் அமர்ந்து கொண்டு உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை மிருதுவாக மசாஜ் செய்து கொதித்து ஆறிய நல்லெண்ணெயைத் தேய்க்கவும். இதற்கு பொறுமை மிக அவசியம். அரக்கப் பரக்கத் தேய்த்து அவசர அவசரமாகக் குளித்தால் அதன் பொருள் முழு எண்ணெய்க் குளியல் செய்து கொண்டதாக ஆகாது. பெண்கள் என்றால் மார்பு வரை பெட்டிகோட் அணிந்து கொண்டு உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நக இணுக்குகளைக் கூட விடாது நல்லெண்ணெய் தேய்த்து ஊற விட வேண்டும். முழுதாய் ஒரு மணி நேரம் சூரிய வெளிச்சத்தில் எண்ணெய் தேய்த்த உடல் பகுதிகள் படுமாறு நடமாடி 1 மணி நேரம் கழிந்ததும் வீட்டில் தயாரித்த சிகைக்காய் கொண்டு எண்ணெய்ப் பிசுக்கு போகத் தேய்த்துக் குளிக்க வேண்டும். சிகைக்காய் இல்லாதவர்கள் தரமான ஷாம்பூக்களைப் பயன்படுத்தலாம். 

நிபந்தனை:  எண்ணெய் குளியல் செய்து கொள்ள விரும்புபவர்கள் மழை நாட்களைத் தவிர்த்து விடலாம். அது மட்டுமல்ல எண்ணெய் குளியல் முடித்து குளியலறை விட்டு வெளி வந்ததும் குளிர்ச்சியாக எதையும் அருந்தி விடக் கூடாது. சூடாக சூப், ரசம் என எதையாவது அருந்தலாம். ஏனெனில் முழு எண்ணெய்க்குளியலால் மொத்த உடலும் குளிர்ந்திருக்கும் நேரத்தில் மேலும் குளிர்ச்சியாக எதையாவது அருந்தினால் சளி பிடித்துக் கொள்ள 100 சதம் வாய்ப்புகள் உண்டு. அதுமட்டுமல்ல, எண்ணெய்க் குளியல் செய்யும் நாட்களில் இரு சக்கர வாகனங்களில் நீண்ட நெடும் பயணங்களை தவிர்த்து விட வேண்டும். வெயிலில் அதிகம் சுற்றக்கூடாது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com