என்னுடைய கலைப் படைப்புகள் அனைத்துமே இயற்கையை அடிப்படையாகக் கொண்டவை:  ராஜஸ்தானியக் கலைஞர் அல்கா மாத்துர்!

இயற்கை மீதான இவரது ரசனைக்கு இவரால் உருவாக்கப்பட்ட டீ பேக் கலைப்படைப்புகள் மிக முக்கிய உதாரணங்கள். இவரது ஓவியக் கண்காட்சியில் முக்கால்வாசியும் இடம்பெறக்கூடியவை இந்த டீ பேக் புத்தகங்கள் மற்றும் ஓவியங்கள
என்னுடைய கலைப் படைப்புகள் அனைத்துமே இயற்கையை அடிப்படையாகக் கொண்டவை:  ராஜஸ்தானியக் கலைஞர் அல்கா மாத்துர்!

ராஜஸ்தான் ஆஜ்மீரைச் சேர்ந்த பிரபல கைவினைக் கலைஞர் அல்கா மாத்தூர் தன்னுடைய பிரத்யேக கலைத்திறன் பற்றி என்ன சொல்றாங்க தெரியுமா? கலைகளின் பிறப்பிடமான வண்ணமயமான ராஜஸ்தானைச் சேர்ந்த தனக்கு அடிப்படையில் கலைகளின் மீதான ஆர்வம் இயல்பிலேயே இருந்தது என்றும் அதற்கான உந்துதலை நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு உள்ளிட்ட பஞ்ச பூதங்களான இயற்கை சக்திகளிடம் இருந்தே தான் பெற்றுக் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இவர் எங்கு பயணம் மேற்கொண்டாலும் சரி; அது கார் ஆகட்டும், ரயிலாகட்டும், விமானமாகட்டும் எதில் பயணித்தாலும் ஜன்னலை மூடிக் கொண்டு அப்படியே தூங்கி விடுவதில்லையாம். ஜன்னல்களை எப்போதும் விரியத் திறந்து வைத்து அதன் வழியாக தன்னைக் கடந்து செல்லும் விரிந்து பரந்த இந்த உலகத்தை ரசனையோடு பார்த்து ரசித்து அதை அப்படியே அழகான ஓவியங்களாக்கி விடுவதில் வல்லவராம். இந்த ஓவிய ரசனை தான் இவரை தனது கலைத் திறனில் அடுத்தடுத்த படிகளை நோக்கி நடத்திக் கொண்டு செல்கிறதென்று அவர் கூறுகிறார். 


இயற்கை மீதான இவரது ரசனைக்கு இவரால் உருவாக்கப்பட்ட டீ பேக் கலைப்படைப்புகள் மிக முக்கிய உதாரணங்கள். இவரது ஓவியக் கண்காட்சியில் முக்கால்வாசியும் இடம்பெறக்கூடியவை இந்த டீ பேக் புத்தகங்கள் மற்றும் ஓவியங்களே! இவரது சமீபத்திய ஓவியக் கண்காட்சி ஓவியங்கள் அனைத்தும் இதற்கு மிகச் சிறந்த உதாரணங்கள். பிரசித்தி பெற்ற மும்பை ஜெ.ஜெ. ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ் மாணவியான அல்கா மாத்துர் இயற்கை சாயமேற்றும் முறை மற்றும் கந்தா பிரிண்டிங் போன்றவற்றிலும் மிகுந்த ஆர்வமுடையவர். இவருடைய படைப்புகளான ஓவியங்கள், கைத்தறிப் புடவை டிசைன்கள், இயற்கச் சாயமுறை என அனைத்துமே இயற்கைப் பொருட்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப் படுபவை என்பதோடு பாரம்பரிய மற்றும் சமகாலத் தொடர்புடையவையாகவும் உருவாக்கப் படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்க அம்சங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com