நெயில் பாலிஷுக்கு நாய் பெயர் வைக்கக் கூடாதா என்ன?

மேட் இன் செல்ஸியா’ ஸ்டார் ரோஸி ஃபோர்ட்ஸ்கியூ தனது நாயின் பெயரில் புத்தம் புதிதாக நெயில் பாலிஷ் ஒன்றை தனது நெயில்டு லண்டன் நெயில் பாலிஷ் நிறுவனம் மூலமாக தயாரித்து அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
நெயில் பாலிஷுக்கு நாய் பெயர் வைக்கக் கூடாதா என்ன?

‘மேட் இன் செல்ஸியா’ ஸ்டார் ரோஸி ஃபோர்ட்ஸ்கியூ தனது நாயின் பெயரில் புத்தம் புதிதாக நெயில் பாலிஷ் ஒன்றை தனது நெயில்டு லண்டன் நெயில் பாலிஷ் நிறுவனம் மூலமாக தயாரித்து அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

தான் அறிமுகப் படுத்திய புத்தம் புதிய ஷேட் நெயில் பாலிஷ்க்கு தனது நாயின் பெயரை வைக்கப் போவது குறித்து தான் மிகவும் பெருமையாக உணர்வதாகவும், இனி வரும் நாட்களில் இதுவே தனது ஃபேவரிட் ஷேட் ஆக இருக்கப் போவதாகவும் ரோஸி கூறியுள்ளார்.

முன்னதாக இவர் அறிமுகப் படுத்திய நெயில் ஷேட்களில் ‘ரோஸி ரெட்’ எனும் ஷேட் மிகுந்த பிரபலமடைந்திருப்பது குறித்து தனது சந்தோஷத்தையும் அவர் இவ்வாறு பகிர்ந்து கொள்கிறார். ‘ஒவ்வொரு பெண்ணுக்கும் எத்தனை வண்ணங்களில் நெயில் பாலிஷ்கள் இருந்தாலும் கூட எப்போதுமே கிளாஸிக் ரெட் ஷேட் தான் மனதுக்குப் பிடித்த ஃபேவரிட் ஷேட் ஆக இருக்கும். அந்த வகையில் நான் அறிமுகப் படுத்திய ரோஸி ரெட் கிளாசிக் வண்ணம் பல லட்சக் கணக்கான பெண்களின் இதயம் கவர்ந்த ஃபேவரிட் ஷேட் ஆக இருப்பதில் ஆச்சர்யமில்லை. ஆகவே அதை நான் எனது சிக்னேச்சர் ஷேட் என்று கூறிக் கொள்வதில் பெருமையடைகிறேன். அதோடு கூட இந்த வகை நெயில் பாலிஷ் ஷேட்களைப் பயன்படுத்தும் போது பிற நெயில் பாலிஷ்களைப் போல இது எளிதில் உரிந்து விழுவதில்லை அல்லது கரைந்து மறைவதில்லை. உங்களை அடிக்கடி பியூட்டி சலூன்களுக்குப் போய் மெனி கியூர் செய்து கொள்ளும் அலுப்பில் இருந்து இவை மீட்டெடுக்கின்றன. இந்த வகை நெயில் பாலிஷ்களில் நெயில் லாக்கர், நெயில் ஜெல், நெயில் பாலிஷ், நெயில் வார்னிஷ் என நான்கு விதமான பாலிஷ்கள் பயன்படுத்தப்படுவதால் இவற்றின் ஆயுட்காலம் பிற நெயில் பாலிஷ்களைக் காட்டிலும் மிக நீண்டதாக இருக்கிறது.’ எனவும் அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com