ஆஃபீஸ் பாலிடிக்ஸ் தான் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சவாலா இருக்காமே? அப்படியா?

உடன் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு மத்தியில் நடைபெறும் அரசியலில் இருந்து ஒருவர் தன்னை காப்பாற்றிக் கொள்வது கடினமான காரியமாக உள்ளது.
ஆஃபீஸ் பாலிடிக்ஸ் தான் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சவாலா இருக்காமே? அப்படியா?

அலுவலகத்தில் சக ஊழியர்களுக்குள் நடைபெறும் அரசியல்தான் ஒரு ஊழியருக்கு மிகப்பெரும் சவால் என்று லைஃப்செல் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மனித வளத் துறையின் தலைவர் உமாபதி மூர்த்தி கூறினார். இளைஞர்களுக்கான உளவியல் மூலதனம் என்ற தலைப்பிலான தேசியக் கருத்தரங்கம், சென்னைப் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. 2 நாள் நடைபெறும் இந்தக் கருத்தரங்கை தேசிய ராஜீவ்காந்தி இளைஞர் மேம்பாட்டு நிறுவனமும், பல்கலைக்கழகத்தின் உளவியல் மற்றும் பயன்பாடு உளவியல் துறையும் இணைந்து நடத்துகின்றன. வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொடக்க விழாவில் உமாபதி மூர்த்தி பேசியது:

ஒருமுறை ஒரு பொறியியல் கல்லூரியில் வளாகத் நேர்காணல் நடத்துவதற்காக சென்றிருந்தோம். அந்தக் கல்லூரியில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியியல் (இஇஇ) இறுதியாண்டு மாணவரிடம் நேர்காணல் தொடங்கியது. அவரிடம் மின்சாரத்துக்கும் மின்னணுவுக்கு உள்ள வேறுபாடு என்ன என்ற அடிப்படை கேள்வியைக் கேட்டேன். அந்த மாணவன் உடனே, சார் என் அப்பாவுக்கு உங்களை நன்றாகத் தெரியும் என்று பதில் அளித்தான். ஒருவர் தேர்ந்தெடுக்கும் துறை குறித்த அடிப்படை அறிவு அவசியமாகும்.

அண்மையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஒரு நேர்காணலில் தன் அம்மா சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்ததால், பள்ளியில் உடன் படிக்கும் மாணவிகள் தன்னை கேலி செய்தனர். அதனை முறியடிக்க படிப்பில் முதலிடம் பெற்றதாகக் கூறினார். இன்றைய தலைமுறையினருக்கு அவர் ஒரு சிறந்த உதாரணம்.

அலுவலகத்தில் உள்ள அரசியல்தான் ஒரு ஊழியருக்கு மிகப்பெரிய சவால் என்று 78 சதவீத மனிதவள நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். உடன் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு மத்தியில் நடைபெறும் அரசியலில் இருந்து ஒருவர் தன்னை காப்பாற்றிக் கொள்வது கடினமான காரியமாக உள்ளது. எதையும் தாக்குப்பிடிக்கும் மனதுடன் அத்தகைய சூழல்களை முறியடிக்க இன்றைய தலைமுறை தயாராக வேண்டும் என்றார் அவர்.

ஹாஸ்பிரா ஹெல்த்கேர் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் பாலசுப்ரமணியன் ஸ்ரீனிவாசன் கூறுகையில், ஒருவரின் தோற்றத்தைக் கொண்டு அல்லது ஒருவரை முதலில் பார்த்தவுடன் 2 நிமிடங்களில் அவரை எடைபோட்டு,அவரைப் பற்றிய ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறோம். அதன் பின்பு அந்த நிர்ணயிக்கப்பட்ட மனநிலையிலேயே அவரை அணுகுகிறோம். இதே மனநிலைதான் அலுவலகத்திலும் நிகழ்கிறது. அந்த நிலை மாற வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com