நேசத்துக்குரியவர்களுக்கு... மனசுக்குப் பிடிச்ச கிஃப்ட் தருவதும்/ பெறுவதும் எப்படி?

இது நாமளே தேர்வு செய்த கிஃப்ட் லிஸ்ட்ங்கறதால நமக்குப் பிடிக்காத உதவாக்கரை கிஃப்டுகள் நம்மை வந்தடைய இனி வழியேதுமில்லை. 
நேசத்துக்குரியவர்களுக்கு... மனசுக்குப் பிடிச்ச கிஃப்ட் தருவதும்/ பெறுவதும் எப்படி?

நமக்கு யாராவது கிஃப்ட் வாங்கி கொடுத்தாலும் சரி, நாம யாருக்காவது கிஃப்ட் வாங்கித் தருவதாக இருந்தாலும் சரி... அந்த கிஃப்ட் நமக்கும், நாம வாங்கித் தரப்போற நண்பர்களுக்கும் மனசுக்கு பிடிச்ச கிஃப்ட்டாகத் தான் இருக்குமா? இல்லையாங்கறது நம்ம ரெண்டு தரப்புலயும் யாருக்கும் தெரியாது. முன் ஜாக்கிரதை முத்தண்ணா/ முத்தக்காக்களாக யாருக்கு என்ன பிடிக்கும்னு முன்னமே கேட்டு வச்சு கிஃப்ட் வாங்கிக் கொடுத்தா... அதுலயும் ஒரு சுவாரசியமும் இருக்காது. நீங்களே யோசிச்சுப் பாருங்க, நம்ம மனசுக்குப் பிடிச்சவங்களுக்கு திடீர்னு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்தா அதுல ஒரு சந்தோசம் இருக்கத்தானே செய்யுது. 

இப்போ பிரச்சினை என்னன்னா? நமக்குப் பிடிச்ச நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ, இல்ல நம்ம குழந்தைகளுக்கோ  பிறந்த நாள், திருமண நாள், வீட்டு கிருஹப் பிரவேசம், குழந்தை பிறப்பு, இப்படி ஏதாவது ஒரு விசேசத்துக்கு கிஃப்ட் வாங்கனும்னு கடைக்குப் போறோம், ஆனா வாங்கற அந்த கிஃப்ட் அவங்களுக்குப் பயன்படுமா? இல்ல அவங்களுக்குப் பிடிக்குமா? அவங்க அதை சந்தோசமா வாங்கி காலத்துக்கும் ஞாபகார்த்தமா வச்சுப் பாதுகாப்பா பயன்படுத்துவாங்களானு எப்படித் தெரிஞ்சுக்கறது? இப்படி நம்மளைப் போலவே யோசித்த சிலர் அப்படியே நம்மைப் போலவே யோசனையோட நின்னுடாம செயலில் இறங்கியதால் வந்தது ஒரு புது வெப்சைட். அதன் பெயர் wishtry. 

அதென்னது wishtry? னு கேட்டீங்கன்னா... அது ஒரு ஆசை மரம்னு வச்சுக்கலாம். அதாவது அந்தக் காலத்துல கற்பக விருட்சம்னு ஒரு தெய்வீக மரம் இருந்ததாம். அந்த மரத்தடில நின்னுகிட்டு உங்களுக்கு தேவையான எதை மனசுல நினைச்சாலும் அது உடனே உங்களுக்கு கிடைச்சுடும்னு கதைகளில் படிச்சிருப்பீங்க.

அதே தான் இந்த whistry வெப்சைட்ல போய் லாக் இன் செய்து உங்களுக்குத் தேவையான பொருட்களின் விருப்பப் பட்டியலை உருவாக்கி வச்சு அதை நண்பர்கள், உறவினர்கள், கணவர், பெற்றோர், உடன் பிறந்தோர் எல்லோருக்கும் தெரியப்படுத்திடனும். இப்போ தான் எல்லாருக்கும் தனித் தனியா மெயில் ஐ.டி இருக்கே, அதோட எல்லா மனித ஜீவன்களும் தினமும் காலையில் எழுந்ததும் காஃபீ, டீ சாப்பிடறாங்களோ இல்லையோ கண்ணைத் திறந்ததும் உடனடியா செய்யற முதல் வேலை மெயில் செக் செய்வது தான். அதனால் whistry  ல் விருப்பப் பட்டியல் தயார் ஆனதும் உடனடியாக அதை சம்மந்தப்பட்ட நபர்கள் அனைவருக்கும் கர்மமே கண்ணா அனுப்பிடனும். அனுப்பிட்டு அதை அவங்க பார்த்தாங்களா இல்லையானும் ஒரு தடவை கேட்டுத் தெரிஞ்சுகிட்டா முடிஞ்சது வேலை. நமக்கு எதெல்லாம் தேவையான கிஃப்ட்னு இப்ப நம்ம ஆட்கள் எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். அடுத்ததா நமக்கு பிறந்த நாளோ, அல்லது வேறு விசேச நாட்களோ வரும் போது என்ன கிஃப்ட் வாங்கனும்னு நம்ம தேர்வு செய்து வைத்த விஷ் லிஸ்ட் அடிப்படையில் இந்த whistry வெப்சைட்டை பார்த்து  நம்ம நண்பர்கள் முடிவு செய்வாங்க. இது நாமளே தேர்வு செய்த கிஃப்ட் லிஸ்ட்ங்கறதால நமக்குப் பிடிக்காத உதவாக்கரை கிஃப்டுகள் நம்மை வந்தடைய இனி வழியேதுமில்லை. 

இப்படி ஒரு வெப்சைட் உருவாக்கினவங்க மும்பையைச் சேர்ந்த அதிதி மேத்தா & ஷைலி பரேக். இந்த கான்செப்ட் மேலை நாடுகளில் முன்பே வழக்கத்திலிருப்பது தானாம். இந்தியாவுக்குத் தான் இது புதுசுன்னு சொல்றாங்க இவங்க. சுமார் 20 லட்ச ரூபாய் செலவுல இவங்க தங்களோட நண்பர்களோட சேர்ந்து கூட்டு முயற்சியா இந்த வெப்சைட்டை தொடங்கி நடத்திகிட்டு இருக்காங்க. இன்னும் சுவாரசியமா சொல்லனும்னா கடை இவங்களோடது தான். ஆனா கடைக்குள்ள சொந்தமா சரக்கே இல்லாம வியாபாரம் பண்றாங்க இவங்கன்னும் சொல்லலாம். அது எப்படின்னா, இந்த வெப்சைட்ல பல விதமான பொருட்களையும் மொத்தமாக விற்பனை செய்யக் கூடிய பல வெப்சைட்டுகளின் ஆப்கள் இணைப்பில் இருக்கும். நாம் நமக்குத் தேவையான, பிடித்த பொருட்களை அந்தந்த வெப்சைட் ஆப்களை கிளிக் செய்து உள்நுழைந்து விஷ் லிஸ்ட் செய்து வைத்துக் கொள்ள முடியும். 

மேலதிக விவரங்களுக்கு...

www.wishtry.in வெப்சைட்டுக்குப் போங்க. ஒவ்வொரு ஆப்சனா கிளிக்கிப் பார்த்து அதிலுள்ள அற்புதமான கிஃப்ட் ஷாப்பிங், கிஃப்ட் லிஸ்டிங் வசதிகளைப் பற்றி தெரிஞ்சுக்கோங்க!

Article concept courtsy: New indian express

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com