‘எல்லோரும் தெரிந்து கொள்ளட்டும்... இந்திய நீதிமன்றங்களும் மாடர்ன் தான் என்று’!

அடுத்த 6 முதல் 7 மாதங்களில் உச்ச நீதிமன்றத்தில் காகிதப் பயன்பாடு முற்றிலும் நிறுத்தப்படும் என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றத்தை முழுமையாகக் கணினிமயமாக்குவது குறித்து தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கேஹர் தலைமையிலான அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: அடுத்த 6, 7 மாதங்களுக்குப் பின் உச்ச நீதிமன்றத்தில் காகிதப் பயன்பாடு இருக்காது. விசாரணை நீதிமன்றங்கள், உயர் நீதிமன்றங்களில் இருந்து ஆவணங்களை மின்னணு முறையில் நாம் பெற்றுக் கொள்ள முடியும்.
நீதிமன்றத்தின் அனைத்து ஆவணங்களும் மின்னணு முறையில் பராமரிக்கப்படவுள்ளன. வழக்கு தொடர்பான அனைத்து விவரங்களும் காகித வடிவத்தில் இருந்து மின்னணு வடிவத்துக்கு மாற்றப்படும். எனவே, நீதிமன்றத்தில் காகிதத்தைப் பயன்படுத்தி மனு தாக்கல் செய்ய வேண்டியது இருக்காது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com