இயற்கைப் பாதுகாப்பு குறித்து, ஜப்பான் நடத்தும் பன்னாட்டு மெகா கட்டுரைப் போட்டி!

முதல் பரிசுக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு 100,000 ஜப்பானிய யென் பரிசும் (ரூ.59,000), பாராட்டுச் சான்றிதழும் அளிக்கப்படும். இரண்டாவது பரிசாக இருவருக்கு 50,000 ஜப்பானிய யென்  பரிசும்...
இயற்கைப் பாதுகாப்பு குறித்து, ஜப்பான் நடத்தும் பன்னாட்டு மெகா கட்டுரைப் போட்டி!

ஜப்பானை இருப்பிடமாகக் கொண்டு செயல்படும் கோய் அமைதி அறக்கட்டளை (The Goi Peace Foundation) எனும் தன்னார்வ அமைப்பு உலகம் முழுவதிலுமிருக்கும் இளைஞர்கள் பங்கேற்கக் கூடிய இளைஞர்களுக்கான பன்னாட்டுக் கட்டுரைப் போட்டி - 2017 ஒன்றினை அறிவித்திருக்கிறது. 

கோய் அமைதி அறக்கட்டளை (The Goi Peace Foundation) எனும் அமைப்பு, இளைஞர்களின் ஆற்றல், கற்பனை மற்றும் முன்முயற்சிகளைப் பயன்படுத்தி, உலகில் அமைதி மற்றும் நிலையான வளர்ச்சியினை ஏற்படுத்தும் முயற்சியின் ஒருபகுதியாக இந்தக் கட்டுரைப் போட்டியினை அறிவித்திருக்கிறது.  

கருத்துரு
இந்தக் கட்டுரைப் போட்டிக்கு இயற்கையிடம் கற்றுக் கொள்ளுங்கள் (Learning from Nature) எனும் கருத்துரு கொடுக்கப்பட்டிருக்கிறது. நவீன நாகரீகம் என்பது இயற்கையைக் கட்டுப்படுத்தியும், அதன் வளங்களைச் சுரண்டியும் உருவாக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், மனிதர்களாகிய நாம் இயற்கையின் ஒரு பகுதியாக இருக்கின்றோம்;  இந்த இயற்கையிடமிருந்து நாம் என்னவெல்லாம் கற்றுக் கொள்ளலாம்; அதை நாம் வருங்காலத்திற்கு எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பன போன்ற கருத்துகளை வெளிப்படுத்தும் விதமாகக் கட்டுரை அமைக்கப்பட வேண்டும்.

பங்கேற்புக்கான வழிமுறைகள்
இக்கட்டுரைப் போட்டியில் பங்கேற்பவர்களின் வயது 15-6-2017 அன்று 25 வயதுக்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும். 14 வயதுக்குட்பட்டவர்கள் சிறுவர்களுக்கான பிரிவிலும், 15 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் இளைஞர்களுக்கான பிரிவிலும் பங்கேற்கலாம்.

கட்டுரை ஆங்கிலம், பிரெஞ்ச், ஸ்பானிஷ், ஜெர்மன், ஜப்பானிய மொழிகளில், ஏதாவதொன்றில் 700 சொற்களுக்கு மிகாமல் அல்லது 1600 எழுத்துக்களுக்கு மிகாமல் எழுதப்பட்டு இருக்க வேண்டும்.

கட்டுரையுடன் 1. பிரிவு (சிறுவர் அல்லது இளைஞர்), 2. கட்டுரைத் தலைப்பு, 3. பெயர், 4. முகவரி, 5. தொலைபேசி எண், 6. மின்னஞ்சல், 7. தேசியம் 8. 15-6-2017 அன்று வயது, 9. பாலினம், 10. பள்ளியின் பெயர் (தேவையிருப்பின்), 11. சொற்களின் எண்ணிக்கை போன்றவைகளைக் கட்டுரைக்கான தலைப்புப் பக்கத்தில் (Cover Page) குறிப்பிட வேண்டும்.

கட்டுரைகளை அஞ்சல் வழியிலோ அல்லது இணையம் வழியாகவோ சமர்ப்பிக்கலாம். கட்டுரை முழுவதும் சொந்தமாக எழுதப்பட்டிருக்க வேண்டும். போட்டிக்கு அனுப்பப்படும் அனைத்துக் கட்டுரைகளின் பதிப்புரிமையும் போட்டி அமைப்பாளருக்குரியதாகும்.

கட்டுரைகளைச் சமர்ப்பிக்க
இப்போட்டிக்கான கட்டுரையினைத் தனியாகவோ அல்லது தாங்கள் பயிலும் கல்வி நிறுவனத்தின் வழியாகவோ http:www.goipeace-essaycontest.org எனும் இணையமுகவரிக்குச் சென்று பதிவு செய்து சமர்ப்பிக்கலாம். அஞ்சல் வழியில் அனுப்ப விரும்புபவர்கள் International Essay Contest co The Goi Peace Foundation, 1-4-5 Hirakawacho, Chiyoda-ku, Tokyo 102-0093 Japan எனும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இணையத்தில் சமர்ப்பிக்கவும், அஞ்சல் வழியில் அனுப்பப்பட்ட கட்டுரைகள் சென்றடையவும் கடைசி நாள்: 15-6-2017. 

பரிசுகள்
இப்போட்டிக்கு வரப்பெற்ற கட்டுரைகளிலிருந்து, சிறுவர்கள், இளைஞர்கள் என ஒவ்வொரு பிரிவிலும் தனித்தனியாகப் பரிசுக்குரிய கட்டுரைகள் தேர்வு செய்யப்படும். முதல் பரிசுக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு 100,000 ஜப்பானிய யென் பரிசும் (ரூ.59,000), பாராட்டுச் சான்றிதழும் அளிக்கப்படும். இரண்டாவது பரிசாக இருவருக்கு 50,000 ஜப்பானிய யென்  பரிசும் (ரூ.29,488), பாராட்டுச் சான்றிதழும் அளிக்கப்படும். மூன்றாவது பரிசாக ஐந்து நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழும் பரிசுப்பொருளும் அளிக்கப்படும். இது தவிர, சிறப்புக்குரியவர்களாக (Honorable Mention) 25 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழும், பரிசுப்பொருளும் வழங்கப்படும். 

போட்டி முடிவுகள்
இப்போட்டிக்கான முடிவுகள் அனைத்தும் 31-10-2017 அன்று இந்த அமைப்பின் www.goipeace.or.jp எனும் முகவரியிலான இணையதளத்தில் வெளியிடப்படும். முதல் பரிசு பெறுபவர்களுக்கு மட்டும் 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜப்பானில் நடைபெறும் விழாவில் பரிசளிக்கப்படும்.

இப்போட்டிகள் குறித்த மேலும் கூடுதல் தகவல்களை அறிய விரும்புபவர்கள், https:www.goipeace.or.jpenworkessay-contest எனும் இணைய முகவரிக்குச் செல்லலாம்.     
- மு. சுப்பிரமணி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com