பாகுபலியைப் பற்றி மார்கண்டேய கட்ஜூ மட்டும் ஒன்றும் சொல்லாமல் இருந்து விடுவாரா என்ன?

பசுக்கள் மனிதர்களை அடிமைகளாக்கி வேலை வாங்கும் சுவாரஸ்யமான காட்சிகளை அட்டகாசமான கிராபிக்ஸ் தொழில்நுட்பத்துடன் காட்டினால் இன்றுள்ள நிலையில் அது பாகுபலி 2 வை விட 10 மடங்கு அதிக லாபம் ஈட்டித் தரும்.” 
பாகுபலியைப் பற்றி மார்கண்டேய கட்ஜூ மட்டும் ஒன்றும் சொல்லாமல் இருந்து விடுவாரா என்ன?

சோஷியல் மீடியாக்களில் தமது கருத்துகளைச் சுதந்திரமாகவும், சூடாகவும் பதிவு செய்து அவ்வப்போது நிலவரத்தைக் கலவரமாக மாற்றக் கூடிய பிரபலங்களுக்கு இந்தியாவில் பஞ்சமே இல்லை. இவர்களில் சிலரது ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பதிவுகளும், கருத்துகளும் மிகவும் சுவாரஸ்யமானவை. அவர்களில் ஒருவர் தான் முன்னால் உச்சநீதி மன்ற நீதிபதிகளில் ஒருவரான மார்கண்டேய கட்ஜூ. ஊரே பாகுபலி திரைப்பட வசூலையும், படத்தையும் பற்றி சிலாகித்துப் பேசிக் கொண்டிருக்க மார்கண்டேய கட்ஜூ மட்டும் கருத்து ஒன்றும் சொல்லாமல் சும்மா இருந்து விடுவாரா என்ன?

ஹாலிவுட்டில் ‘பிளானெட் ஆஃப் தி ஏப்ஸ்’ என்றொரு திரைப்படம் வெளிவந்து சக்கைப் போடு போட்டது. அத்திரைப்படத்தின் படி பூமியை வெற்றி கொள்ளும் மனிதக் குரங்குகள் இங்கிருக்கும் மனிதர்களை அவற்றின் அடிமைகளாக மாற்றி ஏவிக் கொண்டிருக்கும். “இந்தியாவில் அந்தத் திரைப்படத்தை பிளானெட் ஆஃப் தி கவ்ஸ் என்ற பெயரில் ரீமேக் செய்ய வேண்டும். ஏனெனில் இந்தியாவில் பசுக்களுக்காக நடைபெறும் சண்டைகளும், கொலைகளும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே இருக்கின்றன. ஒரு பக்கம் பசுக்களைக் காக்கிறோம் என்ற புனிதக் காரணத்தைச் சொல்லிக் கொண்டு சிலர் அரசியல் அதிகாரங்களை வைத்துக் கொண்டு அராஜகம் செய்கிறார்கள். இன்னொரு பக்கம் மாட்டிறைச்சியை இந்தியாவில் தடை செய்தே தீருவோம் என கும்பல், கும்பலாக சிலர் அடக்குமுறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது நோக்கம் பசுக்களையும், மாடுகளையும் காப்பது தான் என்றால் பேசாமல் பாலிவுட் இயக்குனர்கள் ‘பிளானட் ஆஃப் தி ஆப்ஸ்’ போலவே ‘பிளானட் ஆஃப் தி கவ்ஸ்’ என்றொரு திரைப்படம் எடுக்க முயற்சிக்கலாம். அதில் பசுக்கள் மனிதர்களை அடிமைகளாக்கி வேலை வாங்கும் சுவாரஸ்யமான காட்சிகளை அட்டகாசமான கிராபிக்ஸ் தொழில்நுட்பத்துடன் காட்டினால் இன்றுள்ள நிலையில் அது பாகுபலி 2 வை விட 10 மடங்கு அதிக லாபம் ஈட்டித் தரும்.” என்றிருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com