தாய்க்காக ஒரு மினி தாஜ் மகால் 

முகலாய சக்ரவர்த்தியான, ஷாஜகான், தன்னுடைய காதல் மனைவியான மும்தாஜ்
 தாய்க்காக ஒரு மினி தாஜ் மகால் 

முகலாய சக்ரவர்த்தியான, ஷாஜகான், தன்னுடைய காதல் மனைவியான மும்தாஜ் பேகத்திற்காக எழுப்பிய நினைவுச் சின்னம் தாஜ் மகால் என்பதை எல்லோருமே அறிவோம்.

ஆனால், தன்னுடைய அன்பு தாய்க்காக அமைத்த நினைவுச் சின்னம்தான்  'பீபி கா மக்பாரா' (Tomb of  the lady) என்பதை எத்தனை   பேர் அறிவார்கள்?

ஷாஜகானின் பேரனான, 'ஆசம் ஷா' [ ஔரங்கசீப்பின் மகன் ] தன்னுடைய தாயான, 'தில்ராஸ் பானு பேகம்' என்பவருக்காக எழுப்பிய நினைவுச் சின்னம் தான் இந்த மினி தாஜ் மகால்.

ஏழாவது முகலாய மன்னனான, 'ஆசம் ஷா', [ஔரங்க சீப், தில்ராஸ் பானு பேகத்தின் தன்னுடைய பாலகப் பருவத்திலேயே  தன்னுடைய  தாயை இழந்தான்.

தன்னுடைய தாய், அடுத்தடுத்து குழந்தைகளைப் பெற்று, ஒரு பிரசவத்தில் மாண்டு போனது அவனுக்குள் ஒரு பெரிய வலியை ஏற்படுத்தியது
 
தாய்மை என்பது எத்தனை மேன்மையானது என்பதை உணர்ந்தான் 

தன்னை ஈன்ற தாய்க்கு தக்கதொரு பெருமையைக் கொடுக்க எண்ணினான் அதன் வெளிப்பாடே 'பீபி கா மக்பாரா'

தாத்தா, ஷாஜகான் ஆனவர், ஆக்ராவில், கட்டியது  போலவே , தானும், தன்  தாய்க்கு ஔரங்காபாத்தில் கட்டவேண்டும் என்று ஆசை கொண்டான்.

தாஜ் மகாலைக் கட்ட, 32 பில்லியன் செலவானதாம்.அதைப் போலவே முழுக்க முழுக்க பளிங்கினால் கட்டினால்,செலவு மிகவும் ஆகும் என்றும் ஆடம்பரம் தேவை இல்லை என்றும் ஏழு லட்சம் தான் செலவழிக்க வேண்டும் என்றும் ஔரங்கசீப் மகனிடம் கூறினாராம்.

அதனால், ராஜஸ்தானில் இருந்து வரவழைக்கப் பட்ட மார்பிள்களை ஔரங்காபாத்திற்கு வரவிடாமல் தடை செய்தான், ஔரங்கசீப்.

அதனால், முழுவதுமே பளிங்கினால் அமைக்க முடியாமல், மேல் கலசம் மற்றும் சில இடங்களை மட்டுமே பளிங்கினால் கட்டினான். மீதம் உள்ளவற்றிற்கு பளிங்கினைப் போல் தோற்றமளிக்கும் பிளாஸ்டரைக் கொண்டு கட்டினான்.

தந்தையின் சொல்லை மீறாமல், 6,65,283 ரூபாய், எட்டு அணாக்கள் செலவில் மினி தாஜ் மகாலை தாய்க்காகக் கட்டி முடித்தானாம்.

தாயின் அன்பை வெகு சில வருடங்கள் மட்டுமே பெற்றிருந்தாலும், அதன் மேன்மையை உணர்ந்து வெளிப்படுத்திய விதத்தினை பாராட்டாமல் இருக்க முடியாது அல்லவா?

மகாராஷ்டிரா மாநிலம் செல்பவர்கள், ஔரங்காபாத் சென்று அவசியம் இந்த மினி தாஜ் மகாலை பார்த்து வாருங்கள். 

 செய்தி மற்றும் படங்கள்.......    மாலதி சந்திரசேகரன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com