பாகுபலி 2 வில் அனுஷ்காவுக்கு அண்ணியாக நடித்தவர் யார்?

ஒரு திறன் வாய்ந்த பரதக் கலைஞரான ஆஷ்ரிதா தனது ரோல் மாடலாகக் குறிப்பிடுவது பிரபல பரதக் கலைஞரும் நடிகையுமான ஷோபனாவைத் தான்.
பாகுபலி 2 வில் அனுஷ்காவுக்கு அண்ணியாக நடித்தவர் யார்?

பலருக்கும் பாகுபலி திரைப்படத்தில் அனுஷ்காவின் அண்ணியாக நடித்திருக்கும் பெண்மணியை எங்கேயோ பார்த்தாற் போல இருந்திருக்கும். ஆனால் அவர் இதற்கு முன்பு எந்த திரைப்படங்களிலும் நடித்தவர் இல்லை. அவரது பெயர் ஆஷ்ரிதா, அவர் ஒரு திறமை வாய்ந்த பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடி நடனக் கலைஞர். அவரது நடனத் திறன் ‘கண்ணா நீ தூங்கடா’ பாடலுக்கு அனுஷ்காவை விட அழகாக அவர் ஆடிய நடனத்திலிருந்தே பலருக்கும் விளங்கியிருக்கக் கூடும். நிஜத்தில் அனுஷ்காவுக்கு நடிப்புத் திறன் அதிகமே தவிர நடனம் தனக்கு உகந்தது அல்ல அனுஷ்காவே தனது பல பேட்டிகளில் குறிப்பிட்டிருப்பார். ஆக அனுஷ்காவை விட பாகுபலியில் அவரது அண்ணியாக நடித்த ஆஷ்ரிதா தான் நன்றாக நடனம் ஆடியிருப்பார்.

இவருக்கு இந்த வாய்ப்பு எப்படிக் கிடைத்தது தெரியுமா? 2013 ஆம் வருடம் ஒரு தெலுங்குப் படத்தின் ஆடியோ லாஞ்ச் விழாவில் ஆஷ்ரிதா வடிவமைத்து நடனமாடிய ஒரு செமி கிளாசிக் நடனத்தை இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி தனது குடும்பத்தினருடன் சென்று காண நேர்ந்திருக்கிறது. அப்போது ஆஷ்ரிதாவின் நடனத் திறமை கண்டு வியந்த ராஜமெளலி அவரிடம், தான் ஒரு சரித்திரப் படம் எடுக்கவிருப்பதாகவும் அதில் வாய்ப்பளித்தால் ஆஷ்ரிதாவால் நடிக்க முடியுமா? என்று கேட்டிருக்கிறார். உடனே எந்த வித மறுப்பும் சொல்லாமல் உடனே ஒப்புக் கொண்டாராம் ஆஷ்ரிதா. இப்படித்தான் ஆஷ்ரிதா பாகுபலியில் அனுஷ்காவின் அண்ணியாகி இருக்கிறார். 

ஒரு திறன் வாய்ந்த பரதக் கலைஞரான ஆஷ்ரிதா தனது ரோல் மாடலாகக் குறிப்பிடுவது பிரபல பரதக் கலைஞரும் நடிகையுமான ஷோபனாவைத் தான். பாகுபலியைத் தொடர்ந்து நடிப்பதற்கான வாய்ப்புகள் ஆஷ்ரிதாவுக்கு அதிகம் வந்தாலும் அவரது விருப்பமென்னவோ பாரம்பரிய நடனத்தில் சாதனை செய்வது தானாம். கடந்த ஆண்டு ஹேப்பினஸ் ஆஃப் தில்லானா என்ற பெயரில் ஆஷ்ரிதா தனது தில்லானா நடனத்தை யூடியுபில் பதிவிட அதற்கு இதுவரை கிடைத்த லைக்குகள் 1.7 லட்சமாம்.

இதோ அந்த வீடியோ...
 

Image & video courtsy: google & you tube.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com