சப்பாத்தி மிருதுவாக இருக்க என்ன செய்யலாம்?

மாவு பிசையும்போது கோதுமை மாவுடன் ஒரு டேபிள்ஸ்பூன் மக்காச்சோள மாவும்
சப்பாத்தி மிருதுவாக இருக்க என்ன செய்யலாம்?

மாவு பிசையும்போது கோதுமை மாவுடன் ஒரு டேபிள்ஸ்பூன் மக்காச்சோள மாவும், அரை டேபிள்ஸ்பூன் ரவையும், அரை டீஸ்பூன் சர்க்கரையும் சேர்த்துக் கலக்கி, அந்த மாவில் பூரி செய்தால் மிருதுவாக இருப்பதுடன் பூரி உப்பலாக வரும்.

சப்பாத்தியோ, பூரியோ செய்யும்போது கோதுமை மாவில் சாதம் வடித்த நீர் சேர்த்து மாவை பிசைந்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

அதிக கனமுள்ள கல்லை தோசைக்கும், கன மில்லாத மெலிதான கல்லை சப்பாத்திக்கும் உபயோகிக்க வேண்டும்.

சாதம் வடிக்கும்போது சற்று குழைந்து விட்டது போன்று தெரிந்தால் உடனே சிறிதளவு நல்லெண்ணெய்யைச் சேர்த்தால் மேலும் குழையாமல் இருக்கும்.

குழம்பு, பொரியல் செய்யும்போது உப்பு, காரம் அதிகமாகிவிட்டால் உலர்ந்த பிரெட் அல்லது ரஸ்கைப் பொடித்துத் தூவினால் சரியாகிவிடும்.

வெண்டைக்காயைப் பொரியல் செய்யும்போது புளித்த மோரைச் சேர்த்தால் வெண்டைக்காய் மொறுமொறுவென்று இருக்கும்.

கேழ்வரகை ஊற வைத்து அரைத்துப் பால் எடுத்து, கோதுமை அல்வா போன்று செய்யலாம். கோதுமை  அல்வாவைவிட ருசியாக இருக்கும்.

 -  என். சண்முகம்

உப்பு, சர்க்கரை, புளி, காரம், எண்ணெய் எனப்படும் பஞ்சப் பொருட்களையும் முடிந்த வரை தவிர்த்தால் பலவிதமான நோய்களின் பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.

**

2 டீஸ்பூன் அரிசி, ஒரு டீஸ்பூன் துவரம்பருப்பு, தேவையான உப்பு, நெய், மஞ்சள்தூள் மற்றும் நறுக்கிய கேரட் சேர்த்து, குக்கரில் குழைய வேகவிட்டு மசித்து, ஊட்டச்சத்து நிறைந்த உணவாக குழந்தைகளுக்கு ஊட்டலாம்.

- கே.பிரபாவதி

தெரியுமா?
பாலில் மட்டும்தான் ப்ரோட்டின், கால்சியம், சர்க்கரை, இரும்பு, பொட்டாசியம் மற்றும் சோடியம் ஆகியவை உள்ளன என என்ன வேண்டாம்.  மாறாக  சோயா, பாதாம், அரிசி உட்பட மேலும் பலவற்றிலும் இவை அனைத்தும் உள்ளன.  ஆக, இனி  பாலுக்காக காத்திருக்க வேண்டாம். மேற்கூறியவற்றை பயன்படுத்தியும் முழு ஆரோக்கியமும், திறனும் பெறலாம்.

-ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com