சாமுத்ரிகா லட்சணப்படி பெண்களின் தலைமுடி எப்படி இருக்க வேண்டும்?

பாண்டிய மன்னனுடைய சந்தேகம் பெண்களின் கூந்தலில் இயற்கையாக வாசனை உள்ளதா
சாமுத்ரிகா லட்சணப்படி பெண்களின் தலைமுடி எப்படி இருக்க வேண்டும்?

சங்க காலத்தில் பாண்டிய மன்னனுடைய சந்தேகம் உலகப் பிரசித்திப் பெற்ற கேள்வியான, பெண்களின் கூந்தலில் இயற்கையாகவே வாசனை உள்ளதா , அல்லது நறுமணப் பூச்சுக்களால் அவ்வாசனை உருவாக்கப்பட்டதா என்பதே அது. காலம் காலமாக தருமி முதல் பலரும் ஆராய்ந்து பார்க்க விரும்பும் பிரச்னை இது. பெண்களின் உடம்பில் கற்பூர வாசனை, சந்தன வாசனை, தென்னம்பாளை வாசனை, இலுப்பைப்பூ வாசனை, எலுமிச்சை வாசனை, தாழம்பூ வாசனை, தாமரைப்பூ வாசனை ஆகியவை வந்தால் செல்வச் செழிப்புடன் வாழ்வாள் என்கிறது பெண்களுக்கான சாமுத்ரிகா லட்சணக் குறிப்பொன்று. உடல் இவ்வகை என்றால் கூந்தல் எவ்வகை?

அதே சாமுத்ரிகா லட்சணக் குறிப்பில் பெண்களின் கூந்தல் நீண்டதாகவும், கருமை நிறத்தில் அடர்த்தியான கருங் கூந்தலாக இருக்க வேண்டுமாம். மேலும் பெண்களின் கூந்தலில் மலர் மணம் வீச வேண்டும் என்கிறது அக்குறிப்பு.

'கோரை முடி குடியைக் கெடுக்கும் சுருட்டை சோறு போடும்' என்று சொல்வார்கள். அதாவது சுருட்டை முடி கொண்டவர்கள் எல்லோரையும் வைத்து சோறு போடுபவர்களாகவும், உறவினர்கள் மற்றும் நண்பர்களை அன்புடன் அரவணைக்கும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.

கோரை முடி கொண்டவர்கள் தாய் தந்தையை கஷ்டப்படுத்துபவர்களாகவும் குடும்பத்திற்கு கெட்ட பெயரை கொடுப்பவர்களாகவும் இருப்பார்கள். கலப்பினத்தில் திருமணம் முடிப்பார்கள். ரோமக் கால்கள் எந்த அளவிற்கு மென்மையாக இருக்கிறதோ அந்த அளவிற்கு வாழ்க்கை மென்மையாக இருக்கும். ரொம்ப கஷ்டப்படாமல் அமைதியாக வீட்டிலேயே இருந்தபடி வாழ்க்கை நடத்தும் யோகம் கிட்டும்.

கடினமான மொர மொரவென்று இருக்கும் தலை முடி உள்ளவர்களுக்கு கஷ்ட ஜீவனம் இருக்கும். உழைத்து சாப்பிட வேண்டிய நிலை ஏற்படும். அவர்களது முடி போன்றுதான் வாழ்க்கையும் அமையும்.

ஆனால் இந்த நவீன யுகத்தில் முடி எப்படியிருந்தாலும் அதற்கு நேர் எதிராக மாற்றி அமைத்துக் கொள்ளக் கூடிய தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. சுருட்டை முடியுள்ளவர்கள் ஹேர் ஸ்ட்ரைட்டனிங் செய்து தலைமுடியை நீளமாக்கிக் கொள்கிறார்கள். கோரை முடி இருப்பவர்கள், சுருள் சுருளாக  தங்களுக்குப் பிடித்த வகையில் உருவாக்கிக் கொள்கிறார்கள். முடியே இல்லாமல் வழுக்கை விழுந்தாலும் விக் வைத்து சமாளித்துக் கொள்பவரும் உள்ளார்கள். சிலர் எந்த முடி வகை என்று வகைமை படுத்த முடியாமல் பாய் கட் செய்து கொள்கிறார்கள். சில ஆண்களோ தோள் வரை புரளும் முடியை வளர்த்து அதற்கு ரப்பர் பேண்ட் போட்டுக் கொள்கிறார்கள். எனவே இந்தக் காலக் குழப்பம், ஆள் குழப்பம் இருப்பதால் சாமுத்ரிகா லட்சணம் அவுட் டேட்டாகிவிட்டதோ என நினைக்கத் தோன்றுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com