ரொமான்ஸில் ஆர்வமில்லாமல் இருக்கிறீர்களா? அது ஹார்மோன் பிரச்னையாக இருக்கலாம்!

நம்முடைய அன்றாட வாழ்க்கைக்கு எது அவசியமோ இல்லையோ ஹார்மோன்களின் ஒத்துழைப்பு
ரொமான்ஸில் ஆர்வமில்லாமல் இருக்கிறீர்களா? அது ஹார்மோன் பிரச்னையாக இருக்கலாம்!


 
நம்முடைய அன்றாட வாழ்க்கைக்கு எது அவசியமோ இல்லையோ ஹார்மோன்களின் ஒத்துழைப்பு மிகவும் அத்யாவசியம். காரணம் ஹார்மோன் சுரப்பு குறைந்தால் பலவிதமான பிரச்னைகளை சந்திக்க நேரும். முக்கியமாக ரொமான்ஸ் உணர்வு மிகவும் குறையும்.

உடல் பருமன், தலைமுடி உதிர்வு, ஸ்ட்ரெஸ், ஆண் மலட்டுத்தன்மை, மன அழுத்தம், வன்முறை உணர்வு, சோர்வு, அதிகமான வியர்வை, அகோரப் பசி, ஞாபக மறதி,  உடலுறவில் ஆர்வமின்மை, கருவுறாத நிலை உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு அடிப்படை  ஹார்மோன் குறைப்பாடுதான். இன்றைய இளைய தலைமுறையினரில் பலர் இதனால் அதிகம் பாதிப்படைந்துள்ளனர். ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டீரோன் ஹார்மோன்கள் மனித உடலை பாதிப்பவை. அதோடு, ஒருவரின் உடல் வளர்ச்சி, வளர்சிதை மாற்றம், செல்களின் செயல்பாடு, பாலியல் ஈடுபாடு, இனப்பெருக்கம், மகிழ்ச்சியான மனநிலை போன்றவற்றை கட்டுப்படுத்துபவை. சரியான வாழ்வியல் முறையும், ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களும் உடற்பயிற்சியும் இருந்தால் போதும் இத்தகைய ஹார்மோன் குறைபாட்டைச் சரி செய்துவிடலாம்.

நீங்கள் தினமும் சாப்பிடும் உணவின் வழி இதனை சீர் செய்ய முடியும். உளுந்தம் களி,  ராகி களி, எள் உருண்டை, ஆளி விதை, வேக வைத்த முட்டை சோயா போன்ற உணவுகளில் இயற்கையாகவே ஈஸ்ட்ரோஜன் உள்ளது. சோயாவில் அதிகளவு இயற்கையான ஈஸ்ட்ரோஜன் உள்ளது. பலர் சோயா பால் குடிப்பார்கள். ஆனால் அது செயற்கை முறையில் தயாரிக்கப்படுவதால் அதை தவிர்ப்பது நல்லது. அதற்கு பதில் சோயா விதைகளை வாங்கி ஊற வைத்தபின் நன்றாக காய வைத்து அரைத்து அதன்பின் சப்பாத்தி மாவுடன் சேர்த்து சமைக்கலாம், இல்லையெனில் சோயாவை வேக வைத்து வெங்காயம் தக்காளி சேர்த்து சாப்பிடலாம். இவை பெண்களுக்கான ஹார்மோன் குறிப்பு. 

ஆண்களின் பிரச்னை பொதுவான பிரச்னை விந்தணு குறைப்பாடு. ஆண்கள் சோயா நிறைந்த உணவுப் பொருட்களை தவிர்த்துவிட வேண்டும். காரணம் பெண்களுக்கு தேவையான ஈஸ்ட்ரோஜன் இதிலுள்ளதால் இது ஆண்களுக்கானதல்ல. இதனால் ஆண்மை குறைய வாய்ப்பு உள்ளது என்கிறது ஒரு ஆய்வு. ஆண்களைப் பொருத்தவரை, அவர்கள் உணவுப் பழக்கத்தில் மட்டுமல்லாமல் உடலிலும் அதிக அக்கறை செலுத்தவேண்டும். சமச்சீரான உணவு, உடற்பயிற்சி, சரியான வாழ்வியல் முறைகள் கடைப்பிடித்தால் பிரச்னையில்லை.

பெண்கள் தங்கள் மாதவிடாய் பிரச்னையை சீர் செய்தால் பாதி பிரச்னைகள் தீர்ந்தது போல. எனவே சத்தான உணவுகளை அதிலும் குறிப்பாக பப்பாளி, எள் உருண்டை தினமும் சாப்பிட வேண்டும். இவற்றில் எள்ளில் பைடோ ஈஸ்ட்ரோஜென்கள் (Phytoestrogens) நிறைந்துள்ளதால், இது பெண்களுக்கு பீரியட்ஸ் பிரச்னைகளைச் சரி செய்யும். இரும்புச்சத்து, கால்ஷியம், மினரல்கள், ஃபைபர் உள்ளிட்ட பலவிதமான சத்துக்கள் எள்ளில் இருக்கிறது. நல்லெண்ணெய் பயன்படுத்தி சமைக்கலாம். எள்ளை வெல்லம் கலந்து உருண்டை பிடித்து சாப்பிடலாம். அல்லது துவையல் செய்தும் சாப்பிடலாம். 

பெண்களில் 40 முதல் 50 வயதிலிருந்தே, அதாவது மெனோபாஸ் முடிந்தவுடனே, பாலியல் நாட்டம் குறையும். இதற்குக் காரணம், அதுவரை ஈஸ்ட்ரோஜன் உள்ளிட்ட ஹார்மோன்கள் பெண்களின் ஆர்வத்தை பாதுகாக்கிறது. இதே ஹார்மோன் அவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வராமல் தடுக்கிறது. 

மெனோபாஸ் காலகட்டத்தில் உடலுறவு இருந்தால் கருவுற்று விடுவோமோ என்ற பயம் சிலருக்கு உள்ளது. உடலுறவே இனி தேவை இல்லை என்ற முடிவுக்கும் சிலர் வந்துவிடுவார்கள். இந்த இரண்டும் தேவை இல்லை. மெனோபாஸ் வந்துவிட்டதால் கருவுருதல் முற்றுப்புள்ளி பெற்றுவிடும். எனவே பயப்படத் தேவையில்லை. தாம்பத்திய உடலுறவு என்பது கணவன் மனைவி இருவரின் அன்பின் வெளிப்பாடு எனவே இதற்கு மெனோபாஸ் தடையில்லை. பிறப்புறுப்பு வறண்டு இருப்பதால் பெண்களுக்கு எரிச்சல் ஏற்பட்டு உறவு கொள்வதில் பிரச்னை இருக்கலாம். இதற்கு சரியான தீர்வு தேங்காய் எண்ணெய். சிறிதளவு அதைத் தடவினால் போதும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com