ஸ்மார்ட்ஃபோனின் 5 தீமைகள் இவைதான்!

நீண்ட நேரம் அலைபேசியைப் பயன்படுத்துவோருக்கு பலவிதமான உடல் பிரச்னைகள் ஏற்படுகின்றது.
ஸ்மார்ட்ஃபோனின் 5 தீமைகள் இவைதான்!
  1. நீண்ட நேரம் அலைபேசியைப் பயன்படுத்துவோருக்கு பலவிதமான உடல் பிரச்னைகள் ஏற்படுகின்றது. ஸ்மார்ட்ஃபோன் கதிர்வீச்சினால் மூளையில் இரண்டு வகையான கேன்சர் கட்டிகள் உருவாகின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள்.  
  2. இசைப்பிரியர்கள் ஹெட்ஃபோனைப் பயன்படுத்தி பலமணி நேரம் பாடல்களை கேட்கின்றனர், அல்லது காணொலி ஏதேனும் பார்க்கிறார்கள். இது காதுகளுக்கு மட்டுமல்லாமல் மூளைக்கும் பெரும் ஆபத்து. செல்ஃபோனை வலது காதில் வைத்து பேசாமல் இடது பக்க காதில் வைத்து பேசுவது நல்லது. வலது பக்கத்தில் தான் மூளை பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. மூளை பாதிப்பின் முதல் அறிகுறி மறதி. இந்த வயசிலேயே இவ்வளவு மறதியா என்று யாரேனும் உங்களிடம் சொன்னால் உடனடியாக அலர்ட் ஆகுங்கள்.
  3. நீண்ட நேரம் அலைபேசியையே பார்த்துக் கொண்டிருப்பதால், ஒருவர் கண்ணிமைக்கும் நேரம் குறைந்து போகிறது. அது கண்ணின் சுமையை வெகுவாக அதிகரித்து, கண்ணை உலர்ந்து போகச் செய்கிறது. கண் எரிச்சல், கண்களிலிருந்து நீர் கசிதல் உள்ளிட்ட பல பிரச்னைகள் உண்டாகி, நாட்போக்கில் கண் பார்வையை மங்க செய்கிறது.
  4. ஸ்மார்ட்ஃபோன் பயன்பாட்டால் பதின் வயதுப் பெண்கள் விரைவில் பூப்படைகிறார்கள் என்கிறது ஒரு ஆராய்ச்சி. ஸ்மார்ட்ஃபோனின் ஒளி காரணமாக, மெலடோனின் குறைபாடு உண்டாகி, ஹார்மோன் சுழற்சியில் குழப்பம் உண்டாகிறது. இதனால் இரவில் தூக்கம் வராமல் இருப்பதிலிருந்து உடல் தன் இயல்பிலிருந்து மாறும் நிலை ஏற்படுகிறது. உடல்நலத்தில் அக்கறை இல்லாமல் வாழ்க்கை முறை செல்போனால் கடுமையாக மாற்றம் அடைவதால் இயல்பாக நடக்க வேண்டிய விஷயங்கள் முன்னரே நடக்கின்றது.
  5. நீண்ட நாட்கள் செல்ஃபோன் பழக்கத்தினால் தூக்கம் இல்லாமல் இருப்பது நாளடைவில் நியூரோடாக்ஸின் என்னும் நரம்பு நச்சினை உருவாக்கிவிடும். இதனால் மன அழுத்தப் பிரச்னைகள் ஏற்படும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com