நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள இந்திய பட்ஜெட் 2018 - 2019 அப்டேட்ஸ்!

#AskYourFM ஹேஷ்டேக் மூலமாக பட்ஜெட் தொடர்பான கேள்விகளுக்கு அருண் ஜெட்லி பதிலளிக்கிறார்.
நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள இந்திய பட்ஜெட் 2018 - 2019 அப்டேட்ஸ்!

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் வெகு நெருக்கத்தில் இருக்கையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியின் கடைசி பட்ஜெட் 2018 -2019 இன்று காலை 11 மணியளவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இன்னும் சில நொடிகளே உள்ள நிலையில் பொதுமக்களில் அனைத்து தரப்பினரிடையேயும் அதற்கான எதிர்பார்ப்புகள் எகிறிக் கொண்டிருக்கின்றன. சாமானிய மக்கள் முதல் வர்த்தக விற்பன்னர்கள் வரை 2018 -2019 ஆம் ஆண்டுக்கான இந்த பட்ஜெட் தங்களை மகிழ்விக்குமா அல்லது துயரத்தில் ஆழ்த்துமா? என்ற எதிர்பார்ப்பில் பட்ஜெட் அறிவிப்பை எதிர்நோக்கி வெகு ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். 

  • பெட்ரோல் விலை கட்டுக்கு வருமா?
  • வேலை வாய்ப்புகளைப் பெருக்க அறிவிப்பு வருமா?
  • கட்டுமானத்துறை புத்துயிர் பெறுமா?
  • ரயில்வே மற்றும் ராணுவத்துறை புத்துயிர் பெறுமா?
  • பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை வளர்ச்சி மற்றூம் முன்னேற்றத்துக்கான ஏற்றமிக்க அறிவிப்புகள் ஏதேனும் வருமா?
  • தொழில்துறை வளர்ச்சிகளுக்கு உகந்த புதிய அறிவிப்புகள் ஏதேனும் வருமா?
  • கிராமப்புற மாணவர்கள் முன்னேற்றத்துக்கு உதவும் வகையிலான திட்டங்கள் ஏதேனும் அறிவிக்கப்படுமா?

இப்படி பல கேள்விகள் இன்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் பட்ஜெட் உரையைக் கேட்கக் காத்திருக்கும் மக்கள் அனைவரது மனதிலும் உண்டு.

இந்தியாவில் ஜிஎஸ்டி தாக்கல் செய்யப்பட்ட பிறகு வரும் முதல் பட்ஜெட் இது என்பதால் எதிர்பார்ப்புகளுக்கு பஞ்சமில்லை.

நாடாளுமன்றத்தில் காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்து விட்டு மாலை 4 மணியளவில் நிதி அமைச்சர் ஊடகங்களின் பட்ஜெட் குறித்தான கேள்விகளுக்குப் பதிலளிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அது தவிர #AskYourFM ஹேஷ்டேக் மூலமாகவும் பட்ஜெட் தொடர்பான கேள்விகளுக்கு அருண் ஜெட்லி பதிலளிக்கிறார்.

பொதுமக்கள் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள இந்திய பட்ஜெட் 2018 - 2019 குறித்த தங்கள் சந்தேகங்களை இந்த ஹேஷ்டேகில் பதிவு செய்து பதில் பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com