ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் வாட்ஸ் அப் கவிஞர்களின் கவனத்துக்கு!

ஒரு காலத்தில் நாகரிகத்தின், தொழில்நுட்பத்தின், செல்வத்தின் அடையாளமாக இருந்தது வானொலி
ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் வாட்ஸ் அப் கவிஞர்களின் கவனத்துக்கு!

முக நூலிலிருந்து....
* பாட்டு பாடுனா 
பாடகர்...
கதை எழுதினா 
கதையாசிரியர்...
அப்போ அழ்ழ்ங்ஹழ் வச்சா 
அறிஞர்ன்னு தானே 
அர்த்தம்?
- பாலசுப்ரமணியன் செல்வராஜ்

* வாழத் தெரிந்தவனிடம்
வாழ்க்கை இருப்பதில்லை.
பாசம் தெரிந்தவனிடம்
தாய் இருப்பதில்லை.
அன்பு தெரிந்தவனிடம்
காதல் இருப்பதில்லை.
உழைக்கத் தெரிந்தவனிடம் 
காசு இருப்பதில்லை. 
- கலியமூர்த்தி வேதையன்

* நிழல்தானம் செய்யும் 
மரத்திடம்
உடலே... திருவோடாகிறது.
- ஆரூர் தமிழ்நாடன்

* மருமகளே உனக்கு 
சமைக்க 
தெரியலேன்றதைக் கூட
ஜீரணிச்சுப்பேன்...
அடுப்புல பாலை
சிம்ல வைக்கச் 
சொன்னதுக்கு...
சிம் 1...ஆ
சிம் 2 ...ஆ ன்னு 
கேட்டே பாரு.
- பெ.கருணாகரன்

* என்ன செய்ய? 
யானையாகத்தான் இருக்க ஆசை...
உலகம்
பூனைக்குத்தான் பால் ஊற்றுகிறது.
- புதுவை இளவேனில்

சுட்டுரையிலிருந்து...

* எந்தப் பிழையை
நீ எங்கே கண்டாலும்...
அது உன்னிடம் இருந்தாலும்...
திருத்திக் கொள்.
- சரவணன் பாண்டியன்

* தவறுகளை ஒப்புக் கொள்ளத்
தயங்காதே...
அந்த குணம் உன்னை
அடுத்தடுத்து தவறுகள்
செய்யத் தூண்டும்...
- நான் நானாகவே

* பெத்தது கை கொடுக்கலைன்னாலும்
வளர்த்ததாவது "கை'த்தடி
கொடுக்கட்டும்..
"மரம்'
- காளையன்

* இருட்டுக்கும் தெரிந்தே நிகழ்கிறது...
ஒவ்வொரு திருட்டும்.
- கவிமதி சோலச்சி

வலைதளத்திலிருந்து...
ஒரு காலத்தில் நாகரிகத்தின், தொழில்நுட்பத்தின், செல்வத்தின் அடையாளமாக இருந்தது வானொலி ஆகும். டேப் ரிக்கார்டர், தொலைக்காட்சிகள் வந்த பின்னும் இன்றுவரை காலத்துக்கு ஏற்ப தன்னை வடிவமைத்துக் கொண்டு மக்களிடம் செல்வாக்குப் பெற்று விளங்குகிறது வானொலி.

வானொலி, எஃப்எம், சேட்டிலைட் வானொலி, இணைய வானொலி... என இதன் படிநிலை வளர்ச்சி வியக்கத்தக்கது.

இன்றும் நாள்தோறும் வானொலி கேட்போர் நிறையவே இருக்கிறார்கள். பயணம் மேற்கொள்வோர், அலுவலகங்களில், கடைகளில் இன்றும் பலர் வானொலி கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

தனியார் தொலைக்காட்சிகளின் ஆதிக்கத்தால் கட்சி சார்புடைய செய்திகளை அவை போட்டிபோட்டுக் கொண்டு வழங்குவதால் எது நடுநிலையான சரியான செய்தி என்று தெரியாமல் இன்று மக்களிடையே குழப்ப நிலையே நீடித்துவருகிறது. அதனால் தொலைக்காட்சிகளோடு ஒப்பிடும்போது வானொலி நடுநிலையுடைய செய்திகளை வழங்குகிறது என்று மக்கள் நம்புகிறார்கள்.

இன்றைய வானொலி அறிவிப்பாளர்கள் பலர் காலில் சுடுதண்ணீர் ஊற்றியது போல விரைவாக, மூச்சுவிடாமல் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.

குறிப்பாக தமிழ் அறிவிப்பாளர்களிடம் சிக்கிக்கொண்டு தமிழ் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறது.

நன்றி - gunathamizh.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com