பிரபல கர்னாடக வாய்ப் பாட்டுக் கலைஞர் அருணா சாய்ராமுக்கு சங்கீத கலாநிதி விருது! சென்னை மியூசிக் அகாடமி விருதுகள் அறிவிப்பு!

நேற்று (ஜூன் 15,2018) நடைபெற்ற சென்னை மியூசிக் அகாடமியின் செயற்குழுக் கூட்டத்தில் நடப்பாண்டுக்கான விருதுகளுக்கான முடிவுகள் எடுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல கர்னாடக வாய்ப் பாட்டுக் கலைஞர் அருணா சாய்ராமுக்கு சங்கீத கலாநிதி விருது! சென்னை மியூசிக் அகாடமி விருதுகள் அறிவிப்பு!

நேற்று (ஜூன் 15,2018) நடைபெற்ற சென்னை மியூசிக் அகாடமியின் செயற்குழுக் கூட்டத்தில் நடப்பாண்டுக்கான விருதுகளுக்கான முடிவுகள் எடுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சங்கீத கலாநிதி விருது

பிரபல இசைக் கலைஞர் ஸ்ரீமதி அருணா சாய்ராம் சென்னை மியூசிக் அகாடமியின் நடப்பாண்டுக்கான சங்கீத கலாநிதி விருது பெற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கர்னாடக இசையைப் பல ஆண்டுகளாக வெளி நாடுகளில் பரப்பி அனேக ரசிகர்களைப் பெற்றவர் என்ற பெருமை அருணா சாய்ராமுக்கு உண்டு. இவர், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பல்வேறு இசைக் கலைஞர்களுடன் ஒருங்கிணைந்து பல நிகழ்ச்சிகளை நடத்தியவர். இந்த ஆண்டு டிசம்பர் 15 முதல் 2019-ம் ஆண்டு ஜனவரி 1 வரை நடைபெறும் மியூசிக் அகாடமியின் 92-வது ஆண்டு மாநாட்டுக்கு, அருணா சாய்ராம் தலைமை வகிப்பார்.

சங்கீத கலா ஆச்சார்யா விருதுகள் : 2 

பிரபல மிருதங்க வித்வான் தஞ்சாவூர் ஆர். ராமதாஸுக்கும், திருவனந்தபுரம் ஸ்வாதித் திருநாள் இசைக் கல்லூரியில் இசை பயின்ற வாய்ப்பாட்டுக் கலைஞர் டாக்டர் கே. ஓமணக் குட்டிக்கும் சங்கீத காலாச்சார்யா விருது வழங்கப்படும். 

டி.டி.கே விருதுகள்: 2

வீணைக் கலைஞர் கல்யாணி கணேசனுக்கும் நாதஸ்வர வித்வான் எஸ்.ஆர்.ஜி. ராஜண்ணாவுக்கும் டி.டி.கே விருதுகள் வழங்கப்படும். 

இசை ஆய்வாளர் விருது (ம்யூசிக்காலஜிஸ்ட் விருது)

இவ்விருது ஹரிகதா கலைஞர் பிரமீளா குருமூர்த்திக்கு வழங்கப்படும். சென்னை பல்கலைக்கழகத்தின் இசைப் பிரிவுத் தலைவராக இருந்து, தற்போது தமிழ்நாடு நுண்கலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உள்ள இவர் சி.பன்னி பாயின் சீடராவார். 

சங்கீத கலாநிதி உள்ளிட்ட மற்ற விருதுகளும் 2019-ம் ஆண்டு ஜனவரி முதல் தேதி அன்று மியூசிக் அகாடமியில் நடைபெறும் சதஸ்ஸில் வழங்கப்படும். 

ந்ருத்ய கலாநிதி விருது

நடனத்துக்காக வழங்கப்படும் ந்ருத்ய கலாநிதி விருதைப் பெறுவர் பிரபல பரத நாட்டிய கலைஞர் சாந்தா தனஞ்செயன். கலாசேத்ரா மாணவியான இவர் கதகளி மற்றும் கர்னாடக இசையிலும் விற்பன்னர். சங்கீத கலாச்சார்யா விருது பெற்ற அவரது கணவரும் நடனக் கலைஞருமான வி.பி.தனஞ்செயனுடன் இணைந்து பரத கலாஞ்சலி என்ற நடனப் பள்ளியை நடத்துகிறார் சாந்தா. ந்ருத்ய கலாநிதி விருது, மியூசிக் அகாடமியின் நடன விழா தொடக்க நாளான ஜனவரி 3-ம் தேதியன்று வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com