படிச்சிட்டு வெடிச்சி சிரிங்க! இந்த நாள் இனிய நாள் ஆக வாழ்த்தும் மொக்கைப் பாடினியார் கிளப்! 

இதென்னடா சோதனைன்னு நினைச்சிடாதீங்க... சும்மா ஒரு வார்ம் அப்க்காக இப்படித் தொடங்கி இருக்கோம். இது சும்மா சாம்பிள் தான்... இன்னும் நிறைய அருமையான ஜோக்குகளுடன் உங்களை வாரா, வாரம் சந்திக்க வருகிறார் மொக்க
படிச்சிட்டு வெடிச்சி சிரிங்க! இந்த நாள் இனிய நாள் ஆக வாழ்த்தும் மொக்கைப் பாடினியார் கிளப்! 

1.எலி எப்போ யானையாகும்?

பேண்ட் போட்டுக்கும் போது யானையா மாறிடும்... எலிபேண்ட்.

2. ஒரு மனிதனுக்கு ரொம்பச் பசி சாப்பிடலாம்னு ஒரு சாப்பாட்டுக் கடையைத் தேடி ரோட்ல நடந்து போயிட்டிருந்தான். அப்போ திடீர்னு மழை பெய்ததா? அவன் பசி தீர்ந்து வீட்டுக்குப் போயிட்டான்? அதெப்படி?

ஏன்னா? பெய்தது அடைமழை. அடையைச் சாப்பிட்டதும் பசி தீர்ந்துரும்ல.

3. வாளி நிறையத் தண்ணீர் இருந்தது. ஒருத்தன் அதுல ஒன்னு போட்டான். உடனே தண்ணீர் எல்லாம் காலி. அவன் என்ன போட்டான்?

ஓட்டை போட்டான். 

4.லைஃப்ல ஒன்னுமே இல்லனா போர் அடிக்கும், தலைல ஒன்னுமே இல்லனா?

பள, பளன்னு க்ளேர் அடிக்கும்

5.ஏழு தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைத்திருந்தாலும் ஒரு இடத்துல மட்டும் நீங்க நின்னுக்கிட்டே தான் சாப்பிட்டாகனும் அது எந்த இடம்?

பாஸ்ட் ஃபுட் கடை

இதென்னடா சோதனைன்னு நினைச்சிடாதீங்க... சும்மா ஒரு வார்ம் அப்க்காக இப்படித் தொடங்கி இருக்கோம். இது சும்மா சாம்பிள் தான்... இன்னும் நிறைய அருமையான ஜோக்குகளுடன் உங்களை வாரா, வாரம் சந்திக்க வருகிறார் மொக்கை பாடினியார். காக்கை பாடினியார் மாதிரி இவங்க மொக்கை பாடினியார். அவர் என்ன செய்யப் போகிறார்னா? உங்களுக்கு அப்பப்போ இப்படி மொக்கை ஜோக்குகளாகச் சொல்லி சிரிக்க வைப்பார்.

இப்போதைக்கு இந்த கிளப்ல அவர் மட்டும் தான் பிரஸிடெண்ட், செக்ரட்டரி, மெம்பர் எல்லாம். விருப்பம் இருக்கறவங்க dinamani.readers@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்களது மொக்கை ஜோக்குகளை அனுப்பிச் சிறப்பிக்கலாம். படித்தவுடன் குபீரெனச் சிரிக்க வைக்கத் தக்க மொக்கை காமெடிகள் உடனடியாக தினமணி இணையதளத்தில் பிரசுரமாகும். அப்படியே நீங்களும் மொக்கைப் பாடினியார் கிளப்ல இலவசமா உறுப்பினர் ஆகிடலாம். 

ஜோக்குகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: dinamani.readers@gmail.com

காக்கப் பாடினியார் எனும் அருமையான பெண்பாற்புலவரின் பெயரைத் திரித்து உருவாக்கியது தான் இந்த மொக்கைப் பாடினியார் என்ற பெயர். உச்சரிக்க மட்டுமல்ல, எளிதில் மனதிலும் பதியும் என்பதற்காகவும் தான் இந்தப்பெயர் எடுத்தாளப்பட்டுள்ளது. ஆனாலும் ஒரு அருமையான புலவரின் பாதிப் பெயரை கடனாக எடுத்துக் கொண்டதற்காக ஒரு சிறு பிராயச்சித்தமாக அவரது செய்யுள் ஒன்றைப் பற்றி இன்று தெரிந்து கொள்ளுங்கள். அந்தச் செய்யுளிலேயே அவருக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது என்பதைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

‘திண்தேர் நள்ளி கானத்து அண்டர்
பல்ஆ பயந்த நெய்யின் தொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோறு
எழுகலத்து ஏந்தினும் சிறிது – என்தோழி
பெருந்தோள் நெகிழ்ந்த செல்லற்கு
விருந்து வரக் கரைந்த காக்கையது பலியே!’

எனும் குறுந்தொகைப் பாடல் காக்கைப் பாடினியார் நச்செள்ளையார் என்பவரால் பாடப்பட்டது. இந்தப் பாடலின் அர்த்தம்... பொருள்வயின் தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன், துணையாக தோழியை தலைவியிடம் விட்டுச் செல்கிறான். பிரிவாற்றாமையால் தினமும் தோழியிடம் தன் மனக்குமுறலைச் சொல்லிப் புலம்பும் தலைவிக்கு தோழியோ, வாசலில் புன்னை மரத்தில் கரையும் காக்கையைக் காட்டி, ‘இதோ பார் தலைவி, இன்று காகம் கரைகிறது, இதோ வந்து விடுவான் நம் தலைவன்’ என்று சமாதானம் சொல்கிறாள். இது ஒரு நாள் அல்ல, இருநாட்கள் அல்ல. தினமும் இப்படி காக்கை கரைவதைக் காட்டிக் காட்டியே தலைவன் மீண்டு வரும் வரையிலான நாட்களைக் கடத்துகிறாள் தோழி. அப்படிப் பட்ட தோழி தன் தலைவிக்கு கிடைத்தமைக்காக திரும்பி வந்த தலைவன் நன்றி உரைக்கிறான். அப்போது தலைவனுக்கு மறுமொழி கூறும் விதமாக தோழி சொல்லும் பதில் தான் இந்தப் பாடல்...
அதாவது, தலைவனே, நீ வீணாக எனக்கு நன்றி உரைக்க வேண்டியதில்லை, தினமும் உன்னைப் பிரிந்து தவித்து உடல் இளைத்து சளைத்த தலைவியின் மனதைச் சமாதானப் படுத்திய வாசலில் கரையும் அந்தக் காகம் தான். அதனால் உங்கள் புகழ்மொழிகளும், நன்றியும் அந்தக் காகத்துக்கு உரியது. எனவே அதற்கு பலி அளித்து உங்கள் நன்றியைத் தெரிவியுங்கள்’ என்கிறாள்.

நிற்க. சங்கப் பாடலின் அர்த்தம் புரிந்ததில்லையா... சரி இப்போது பாடலுடன் சேர்த்து அதைப் பாடிய புலவருக்கு ஏன் காக்கப் பாடினியார் என்று பெயர் வந்ததென்றும் உங்களுக்குப் புரிந்திருக்கக் கூடும். ஆம், அவரது நற்பெயர் நச்செள்ளையார் தான். ஆனால், அந்தக் காலத்தில் பலருக்கு அந்தப் பெயர் இருந்ததால், தனித்துத் தெரிவதற்காக காக்கைப் பாடினியார் என்ற சிறப்புப் பெயரில் குறிப்பிடப் பட்டார். காக்கையைப் பாடியதால் இவர் பெயர் காக்கைப் பாடினியார் ஆயிற்று. அவங்களுக்கு பெயர் வந்த கதையைக் கேட்கும் போதே சிரிப்பு வருது தானே? அதான் அந்தப் பெயரில் இருந்து கொஞ்சம் கடன் வாங்கியிருக்கோம் பாஸ். ப்ளீஸ்... தீவிர சங்க இலக்கியவாதிகள் மன்னிச்சு!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com