உலகின் மகிழ்ச்சிகரமான பத்து நாடுகளின் பட்டியலில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா?

அண்மையில் ஐ.நா வெளியிட்ட உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் முதல் இடம் பெற்றது ஃபின்லாந்து.
உலகின் மகிழ்ச்சிகரமான பத்து நாடுகளின் பட்டியலில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா?

அண்மையில் ஐ.நா வெளியிட்ட உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் முதல் இடம் பெற்றுள்ளது ஃபின்லாந்து.

உலக மக்கள் பலரும் விரும்பும் அமெரிக்கா 18-ம் இடத்தில் உள்ளது. ஜெர்மனி 15-ம் இடத்திலும், இங்கிலாந்து 19-ம் இடத்தையும் பிடித்துள்ளது. ஜப்பான் 54-வது இடத்திலும், ரஷ்யா 59-ம் இடத்திலும், சீனா 86-வது இடத்திலும் உள்ளது.

இந்தப் பட்டியலில் இந்தியா 133-வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவிற்கு முன்னும் பின்னுமாக காங்கோ 132 - ம் இடத்திலும் நைஜீரியா 135-ம் இடத்திலும் உள்ளது.

கணக்கெடுக்கப்பட்ட 156 நாடுகளில் கடைசி இடத்தை பிடித்தது புருண்டி (Burundi), அதற்கு முந்தைய இடமான 155-ம் இடத்தில் செண்ட்ரல் ஆஃப்ரிகன் ரிபப்ளிக் உள்ளது. சவுத் சூடான் 154-ம் இடத்தில் இருக்க, 153-வது இடத்தில் டான்சானியாவும், 152-ம் இடத்தில் யேமனும் உள்ளது. இந்த நாடுகளில் வாழும் மக்கள் மகிழ்ச்சியற்று அதிக மன அழுத்தத்துடன் வாழ்ந்து வருகிறார்கள் என்று தெரிகிறது.

உலகின் மகிழ்ச்சியான அந்த பத்து நாடுகள் இவைதான். இந்த நாடுகளில் பெரும்பாலும் இலவச கல்வி தரப்படுகிறது. வேலை வாய்ப்புக்கள், வாழ்க்கை மூறை, பாலின சமத்துவம் என அந்நாடுகளில் வாழும் மக்கள் தங்கள் நாட்டை சொர்க்கபுரியாகவே கருதுகிறார்கள். வெளிநாடுகளிலிருந்து குடியுரிமை பெற்று ஃபின்லாந்துக்கு வருவோர்களையும் அன்புடன் வரவேற்று சம உரிமைகள் தந்து மகிழ்கிறது ஃபின்லாந்து.

  1. ஃபின்லாந்து
  2. நார்வே
  3. டென்மார்க்
  4. ஐஸ்லாந்து
  5. ஸ்விட்சர்லாந்து
  6. நெதர்லாந்து
  7. கனடா
  8. நியூஸிலாந்து
  9. ஸ்வீடன்
  10. ஆஸ்திரேலியா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com