இது உடம்பு மற்றும் உயிர்  சம்பந்தப்பட்டது!

இது உடம்பு மற்றும் உயிர்  சம்பந்தப்பட்டது!

வலைதளத்திலிருந்து...

செயற்கைக் கோள், செயற்கைப் பட்டு, செயற்கை முடி, செயற்கைப் பூக்கள் என வாழ்வில் பல செயற்கையாகி விட்டன. ஆக, செயற்கையான விஷயங்கள் நமக்குப் புதிதில்லை. 

ஆனால், செயற்கை குளிர்பானங்களை அவ்வாறு எடுத்துக் கொள்ள முடியாது. ஏனென்றால் இது உடம்பு மற்றும் உயிர்  சம்பந்தப்பட்டது. செயற்கைக் குளிர்பானங்களுக்கும், உயிருக்கும் என்ன தொடர்பு?   

சிலமாதங்களுக்கு முன், இந்த வகை குளிர்பானங்களில் அங்கீகரிக்கப்பட்ட (?!) அளவுக்கு மேல் பூச்சிமருந்து கலந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நாடு முழுவதும் குளிர்பான அழிப்பு, எதிர்ப்பு, கழுதைக்கு குளிர்பானம் புகட்டுதல், சாக்கடையில் வீசுதல் போன்ற போராட்டங்கள் நடந்தன. கொஞ்ச நாட்களில் அவை அனைத்தும் காணாமல் போய்விட்டன. மக்கள் வழக்கம்போல் அடுத்த பரபரப்புக்குத் தாவி விட்டனர்.  

இந்த மாதிரி விஷ(ய)ங்களை உலகத்திற்கு "அர்ப்பணிப்பு' செய்த அமெரிக்காவோ இப்போது, குளிர்பானங்களை பள்ளிகளில் விற்கக் கூடாது என்று மாநிலத்திற்கு மாநிலம் சட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது. காரணம், பள்ளி மாணவ, மாணவியர் அதிக அளவு குளிர்பானங்களைக் குடித்துவிட்டு  பருமனாகிவிட்டனராம்...

உள்ளூர் நெருக்கடி மற்றும் உலகமயமாக்கல் காரணமாக இந்த குளிர்பான நிறுவனங்கள் இந்தியா போன்ற ஏமாளி நாடுகள் பக்கம் வருகின்றன. பய சாதத்தை அழகாக பொட்டலம் போட்டு அதில் அமெரிக்க கொடி மற்றும் ‘ஙஹக்ங் ண்ய் ற்ட்ங் மநஅ’ என்று பொறித்தால், போட்டி போட்டுக்கொண்டு பெருமையுடன் வாங்கும் நமது இந்தியர்கள்தான் அவர்களின் இலக்கு.  

http://thanjavuraan.blogspot.com

முக நூலிலிருந்து....

வைப்பர் வேகத்தினும் வேகமாய்...
சலிக்கவே சலிக்காமல்...
எழுதிக் கொண்டிருக்கிறது  மழை, எனக்கான கடிதத்தை.

- இரா எட்வின்

மிக மிக மென்மையாய் தடவிப் பார்த்து... 
நாசிக்கு சற்று தூரத்திலேயே 
கவனமாய்  தள்ளி வைத்து... 
மூச்சுக்காற்றால் மெதுவாய் 
முத்தமிட்டு ஆனந்தித்து...
பின் புன்னகையில் மென்மை தடவியபடி சொல்கிறார்:
'இந்த ரோசா எவ்வளவு அழகாயிருக்கு' என அந்த  பார்வையிழந்தவர்.

- வணவை தூரிகா

சொந்த பந்தங்களுடன் இணக்கமாக இருக்க முடியாதவர்கள்...
சமுதாயத்துடன் ஒருபோதும் இணக்கமாக இருக்க முடியாது.

- பாலகுருசாமி மருதா

இந்த உலகில் பல பேரின் தோல்விக்குக் காரணம்,
அவர்களின் நம்பிக்கைக்கு உரியவர்களால் முதுகில் குத்தப்பட்டதே .

- துரை பாரதி

பொத்த வேண்டிய வாயை...
 பொத்த வேண்டிய நேரத்தில்...
பொத்திக்கிட்டு 
இருக்கணும்ங்கிறதுதான்... 
புல்லாங்குழலின் 
தத்துவம்

- டிகே கலாப்ரியா

சுட்டுரையிலிருந்து...

நம்ம ஆளுங்க பைக்குக்கு பதில் சைக்கிள்ல கூட போயிடுவாங்க.  ஆனா... மொபைலுக்குப் பதில் லேண்ட் லைனை யூஸ் பண்ணுன்னு சொன்னா
செத்தே போயிடுவாங்க.

- பர்வீன் யூனுஸ்

எப்பவாச்சும் யாராச்சும்  இப்படி நல்லது போதிப்பாங்க...
கவனிக்கவும் மக்களே...

- லதா   

பல  அவமானங்களைக் கண்டவனுக்கு பழி சொற்கள் பெரிதான  பாதிப்பை 
ஏற்படுத்தியதில்லை.

- விதுண்

அமாவாசை இருள்தான் பூரண சந்திரனுக்கு முழு விளம்பரமாயிருக்கும்!

- ச. திவாகரன் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com