கொல்கத்தா நியூ மார்க்கெட் சரித்திர பங்களாக்களில் ஃபிப்ரவரி 24, 25 ல் கோஸ்டு டூர்!

நமது சரித்திரப் புத்தகங்களில் நாம் படித்த வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடங்களுக்குள் புதைந்து கிடக்கும் எண்ணற்ற கதைகளை அறிந்து கொள்ள இது ஒரு வாய்ப்பு! 
கொல்கத்தா நியூ மார்க்கெட் சரித்திர பங்களாக்களில் ஃபிப்ரவரி 24, 25 ல் கோஸ்டு டூர்!

கொல்கத்தாவில் டல்கெளஸி பிரபு காலத்தில் கட்டப்பட்ட பல மாளிகைகள் பல இப்போதும் இருக்கின்றன. அவற்றில் சில சிதிலமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தாலும் மேலும் சில பிரமாண்ட மாளிகைகள் இன்னமும் பிரிட்டிஷ் காலத்திய கொடுமைகளின் சாட்சியாக அப்படியே இருக்கின்றன. மக்கள் புழக்கமற்ற அந்த மாளிகைகளை உள்ளீர் மக்களில் சிலர் பீதியூட்டும் சாகஸ கேளிக்கை நிகழ்வுகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். அதாவது இந்த மாளிகைகள் பேய் பங்களாக்களாக அடையாளப் படுத்தப் பட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் விதமாக  கோஸ்டு டூர் என்ற பெயரில் உள்ளூர் சுற்றுலா மையங்கள் சிறப்பான திரில் டூர்களை வடிவமைத்துள்ளன. பயிற்சி பெற்ற கைடுகளின் துணையுடன் கொல்கத்தாவில் இந்த பேய் பங்களாக்களை ஒரு முறை சுற்றி வரலாம்.
இவை அனைத்தும் பிரிட்டிஷ் காலத்திய அரசு பங்களாக்கள் என்பதால் உள்ளே நுழைய அனுமதி இல்லை, ஒவ்வொரு பேய் பங்களா முன்பும் சுற்றுலாப் பயணிகளை நிறுத்தி வைத்து அந்தந்த பங்களாக்களுக்குரிய புராதன, சரித்திரக் கதைகள் கைடுகளால் சொல்லப்படும். நமது சரித்திரப் புத்தகங்களில் நாம் படித்த வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடங்களுக்குள் புதைந்து கிடக்கும் எண்ணற்ற கதைகளை அறிந்து கொள்ள இது ஒரு வாய்ப்பு! 

நாள்: ஃபிப்ரவரி 24, 25

நேரம்: காலை 11 மணி முதல்...

கட்டணம்: ரூ 666 / நபர் 
பயணம் துவங்குமிடம்: நியூ மார்க்கெட், காடிம்ஸ் வெளிப்புறத்திலிருந்து, கொல்கத்தா.
மேலதிக தகவலுக்கு: 91-9643982934.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com