மார்ச் 13, அரும்பாக்கம் ராதா ரீஜெண்ட் ஹோட்டலில் ‘ரங் தே’  ஸ்பெஷல் ஹோலி டிஸ்கோதே!

மார்ச் 13, ஹோலி பண்டிகையை முன்னிட்டு, அரும்பாக்கம், ராதா ரீஜெண்ட் ஹோட்டலில் ஸ்பெஷல் ஹோலி டிஸ்கோதே நடக்கவிருக்கிறதாம்
மார்ச் 13, அரும்பாக்கம் ராதா ரீஜெண்ட் ஹோட்டலில் ‘ரங் தே’  ஸ்பெஷல் ஹோலி டிஸ்கோதே!

மார்ச் 13, ஹோலி பண்டிகையை முன்னிட்டு, அரும்பாக்கம், ராதா ரீஜெண்ட் ஹோட்டலில் ஸ்பெஷல் ஹோலி டிஸ்கோதே நடக்கவிருக்கிறதாம். 2016 ஆம் ஆண்டு இதே ஹோலி விழாவில் சுமார் 2500 பேர் ஒரே நேரத்தில் கலந்து கொண்டார்களாம். 20,000 சதுர அடியில் மிகப்பரந்து விரிந்த திறந்த வெளி அரங்கில் விழா நடைபெறும் என அறிவித்திருக்கிறார்கள். சிறுவர்களையும், இளம் பெண்கள், மற்றும் இளைஞர்களையும் கவரும் விதத்தில் வடிவமைக்கப் பட்டிருக்கும் இந்த ஹோலி டிஸ்கோதேவில் உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தவும், பிரமிக்க வைக்கவும் ரெயின் டான்ஸ், பலூன் ஃபைட்ஸ், ஃபேஷன் ஷோ, ஒரு ஸ்பெஷல் நேஷனல் டிஜே, 10 உள்ளூர் டிஜே அரேஞ்மெண்ட், லைவ் ஜூம்பா டான்ஸ், கலர் தண்டர், மெக்கானிகல் புல்லிங், ஃபுட் ஸ்டால்கள், லைவ் டான்ஸ், லைவ் சிங்கிங், குழந்தைகளுக்கான தனித்த விளையாட்டுப் போட்டிகள் என அனைத்தும் உண்டாம்.

மாநில எல்லைகள் தாண்டி ஹோலி கொண்டாட ஆசையிருப்பவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நாள்: திங்கள் கிழமை, மார்ச் 13.
நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை.
இடம்: ராதா ரீஜெண்ட் ஹோட்டல், நம்பர் 171, ஜவஹர் லால் நேரு சாலை, இன்னர் ரிங் ரோடு, அரும்பாக்கம், சென்னை.
கட்டணம்: நபர் ஒருவருக்கு ரூபாய் 499

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com