ராஞ்சி டெஸ்ட் நேரலைப் பதிவு: சதமடித்து வெளியேறினார் மேக்ஸ்வெல்!

ஆஸி. வீரர் மேக்ஸ்வெல் தன்னுடைய முதல் சதத்தை எடுத்தார்.
ராஞ்சி டெஸ்ட் நேரலைப் பதிவு: சதமடித்து வெளியேறினார் மேக்ஸ்வெல்!

இன்று ஆஸி. வீரர் மேக்ஸ்வெல் தன்னுடைய முதல் சதத்தை எடுத்தார். பிறகு அவர் ஜடேஜா பந்துவீச்சில் 104 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

*

நேற்றைய நிலவரம்:

இந்தியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 90 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 299 ரன்கள் குவித்துள்ளது.
அந்த அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 244 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் 117, கிளென் மேக்ஸ்வெல் 147 பந்துகளில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 82 ரன்கள் குவித்து களத்தில் உள்ளனர். இந்த ஜோடி 5-ஆவது விக்கெட்டுக்கு 159 ரன்கள் குவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com