உங்கள் இராசியில் சனி இருந்தால் நன்மையா? தீமையா..?

இராசியில் சனி பகவான் இருந்தால் எந்த விதமான நன்மை தீமைகள் ஏற்படும் என்பதை விரிவாகப் பார்ப்போம்..
உங்கள் இராசியில் சனி இருந்தால் நன்மையா? தீமையா..?

இராசியில் சனி பகவான் இருந்தால் எந்த விதமான நன்மை தீமைகள் ஏற்படும் என்பதை விரிவாகப் பார்ப்போம்..

மேஷ ராசியில் சனிபகவான் இருந்தால் கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாவார். வீண் சண்டைகள் ஏராளமாக ஏற்படும். வாழ்க்கையில் சரிவும் துன்பமும் அடுத்தடுத்து உண்டாகும். எதிரிகளின் தொல்லை அதிகமாக இருக்கும்.

ரிஷப ராசியில் சனி பகவான் இருந்தால் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் உண்டு. தாராள குணம் படைத்தவர்களாக இருப்பீர்கள்.

மிதுன ராசியில் சனிபகவான் இருந்தால் புத்திர பாக்கியம் குறையும். வாழ்க்கையில் துயரமான சம்பவங்கள் உண்டாகும். போட்டி பந்தயங்களால் இழப்பு உண்டாகும். பொது வாழ்க்கையில் தோல்வியும் தொந்தரவும் உண்டாகும்.

கடகத்தில் சனி இருந்தால் பொருளாதார தடை உண்டாகும். புத்திர பாக்கியம் மிகுந்து காணப்படும். தாயாரின் தயவில் வாழ்க்கை ஓடும். எடுத்த காரியங்களில் அதிகம் தோல்வி உண்டாகும். செய்யாத குற்றங்களுக்கு தண்டனை அனுபவிப்பர்.

சிம்மத்தில் சனி இருந்தால் எழுத்து துறையில் மேன்மை உண்டாகும். பிள்ளைகளால் சங்கடமும், தொந்தரவும் உண்டாகும். வாழ்க்கை தொல்லைகள் நிறைந்ததாக இருக்கும்.

கன்னி ராசியில் சனி இருந்தால் வறுமையான வாழ்க்கை, எளிதில் கோபப்படும் தன்மை, உடலில் பிணி ஏற்படுதல் போன்ற பலன்களைத் தரும். பல விஷயங்களுக்கு மற்றவர்களைச் சார்ந்தே செயல்படுவர். வீண் விவாதங்கள் ஏற்படும்.

துலா ராசியில் சனி இருந்தால் மிகுந்த செல்வ செழிப்பு ஏற்படும். பெண்களால் யோகம் உண்டாகும். வியாபாரத்தில் வெற்றியும், சிறப்பும் ஏற்படும். சனிபகவான் சுக்கிரனுடன் சேர்ந்தால் ராஜயோக பலன்கள் உண்டாகும்.

விருச்சகத்தில் சனி இருந்தால் உடல்நிலை பாதிக்கப்படுவர். மிகவும் கண்டிப்பானவராக விளங்குவர். மனதில் சில சஞ்சலங்களும், குழப்பமும் உண்டாகும். எதிலும் நிலையற்ற தன்மையுடன் காணப்படுவர்.

தனுசு ராசியில் சனிபகவான் இருந்தால் மிகவும் திறமைசாலியாக இருப்பர். எதிலும், போராட்ட குணம் பிரகாசிக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி பெற பல தடைகள் உண்டாகும்.

மகர ராசியில் சனிபகவான் இருந்தால் கடினமான உழைப்பால் உயர்வர். பழிவாங்கும் குணம் இருக்கும். உயர்வான வாழ்க்கை வசதியுடன் சிறப்படைவர். தேவையில்லாத பழி சுமைகள் உண்டாகும்.

கும்ப ராசியில் சனிபகவான் இருந்தால் தைரியம், துணிவு காணப்படும். சொத்து சேர்க்கை உண்டாகும். எந்தக் காரியத்தையும் செய்து முடிக்கும் ஆற்றலும் உறுதியும் உடையவராக இருப்பர்.

மீன ராசியில் சனிபகவான் இருந்தால் செல்வ சேர்க்கை ஏற்படும். பெருமைமிக்க வாழ்க்கை, புகழ் மற்றும் செல்வாக்குடன் விளங்குவர். அரசியல் அந்தஸ்து கிடைக்கும். சுபகாரியங்களில் அதிக தடைகள் ஏற்படும்.

அனைத்து ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய பரிகாரம்

சனி பகவான் பூஜை செய்த தலம் திருநள்ளாறு. ஏழரைச் சனி, அஷ்டம சனி உள்ளவர்கள், சனி தசை நடைபெறுபவர்கள் திருநள்ளாறு சென்று சனி பகவானை வழிபாடு செய்வது உத்தமம். சனிக்கிழமை விரதம் இருப்பது நன்மை அளிக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com