நவக்கிரகத்திற்கும் மனிதனுக்கும் இடையே உள்ள தொடர்பு...!

மனிதனுடைய ஒவ்வொரு செயலும் நவக்கிரகங்களின் ஆட்சியின் ஆளுகைக்கு உட்பட்டுத்தான் நடைபெறுகின்றன என்று நம் முன்னோர்கள் நிச்சயித்திருக்கிறார்கள்.
நவக்கிரகத்திற்கும் மனிதனுக்கும் இடையே உள்ள தொடர்பு...!

மனிதனுடைய ஒவ்வொரு செயலும் நவக்கிரகங்களின் ஆட்சியின் ஆளுகைக்கு உட்பட்டுத்தான் நடைபெறுகின்றன என்று நம் முன்னோர்கள் நிச்சயித்திருக்கிறார்கள். பரம்பொருளானவர், ஒவ்வொரு பாகத்திற்கும் ஒவ்வொரு கிரகத்தை அதிகாரியாக நியமித்து இருக்கிறார். அதிகாரியாக நியமிக்கப்பட்ட கிரகங்கள், ஒருவர் முன் ஜென்மத்தில் செய்த வினையை அனுசரித்து அதற்குத் தகுந்த பலன்களைத் தத்தம் தசாபுத்திகள் நடக்கும்போது கொடுத்து வருகின்றன.

ஒருவன் முன் ஜென்மத்தில் புண்ணியம் செய்தவனா, அவன் தந்தை எப்படிப்பட்டவர், அவர் ஆயுள் எப்படி என்பன போன்ற நுட்பங்களை அவனுடைய ஜாதகத்தில் சூரியன் இருக்கும் நிலை வைத்து அறிந்து சொல்லலாம். அதாவது கிரகங்கள் எல்லாம் நம் உடலில் குடி கொண்டிருக்கின்றன என்பதே உண்மையாகும்.

சூரியன் - (தந்தை) ஆத்மா, எலும்பு

சந்திரன் - (தாய்) மனம், இரத்தம்

செவ்வாய், ராகு - (சகோதரர்கள்) பலம், மஜ்ஜை

புதன் - (தாய்மாமன்) வாக்கு, தோல்

குரு - (புத்திரகாரகன்) ஞானம், தசை, மாமிசம்

சுக்கிரன் - (களத்திரகாரகன்) காமம், இந்திரியம்

சனி, கேது - (ஆயுள்) துக்கம். நரம்புத் தசை

கிரகங்களின் பார்வை

எல்லாக் கிரகங்களும் தான் இருக்கும் இடத்திலிருந்து 7ம் வீட்டைப் பார்ப்பார்கள்.

• சூரியன் தான் இருக்கும் வீட்டிலிருந்து 7ம் வீட்டைப் பார்ப்பார்.

• சந்திரன் தான் இருக்கும் வீட்டிலிருந்து 7ம் வீட்டைப் பார்ப்பார்.

• செவ்வாய், தான் இருக்கும் வீட்டிலிருந்து 4,7,8 வீடுகளைப் பார்க்கிற தன்மை உண்டு. (4ம், 8ம் விஷேச பார்வை)

• புதன் தான் இருக்கும் வீட்டிலிருந்து 7ம் வீட்டைப் பார்ப்பார்.

• குரு தான் இருக்கும் இடத்தில் வீட்டிலிருந்து 5, 7, 9 வீடுகளைப் பார்ப்பார். (5ம், 9ம் விஷேச பார்வை)

• சுக்கிரன் தான் இருக்கும் வீட்டிலிருந்து 7ம் வீட்டைப் பார்ப்பார்.

• சனி தான் இருக்கும் இடத்தில் வீட்டிலிருந்து 3, 7, 10 ஆகிய வீடுகளைப் பார்ப்பார். (3ம், 10ம் விஷேச பார்வை)

கிரகங்களின் மார்க்கம் 

சூரியன், சந்திரன், செவ்வாய், குரு, சனி, புதன், சுக்கிரன் ஆகிய 7 கிரகங்களும் ராசியைப் பிரதட்சிணமாகச் சுற்றி வருவார்கள். ராகு, கேது கிரகங்கள் எதிர்புறமாகச் சஞ்சாரம் செய்வார்கள்.

கிரகங்களின் ஸ்தலங்கள் 

சூரியன் - சூரியனார் கோவில்

சந்திரன் - திங்களூர்

செவ்வாய் - வைத்தீஸ்வரன்

புதன் - திருவெண்காடு

குரு - ஆலங்குடி

சுக்கிரன் - கஞ்சனூர்

சனி - திருநள்ளாறு

ராகு - திருநாகேஸ்வரம்

கேது - கீழ்ப்பெரும்பள்ளம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com