விநாயகர் சதுர்த்தி வழிபாடு செய்ய நல்ல நேரம் 

ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி திதியை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம். அன்றைய தினம் விநாயகப்பெருமானை முழுமனதோடு பூஜித்து விரதமிருந்து.....
விநாயகர் சதுர்த்தி வழிபாடு செய்ய நல்ல நேரம் 

ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி திதியை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம். அன்றைய தினம் விநாயகப்பெருமானை முழுமனதோடு பூஜித்து விரதமிருந்து, அருகில் உள்ள ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு வந்தால், நமக்கு அனைத்துவிதமான நன்மைகளும் கிடைக்கும் என்பது உறுதி. 

நிகழும் ஹேவிளம்பி வருடம், ஆவணி மாதம் 9-ம் நாள் 25.08.2017 வெள்ளிக்கிழமை அன்று இல்லங்களில் விநாயகர் சதுர்த்தி பூஜை செய்து வழிபட நல்ல நாள். 

கணபதி ஹோமம் செய்ய உகந்த நேரம் 
காலை 4.30 மணி முதல் 7.30 மணி வரை 

விநாயகர் பூஜை செய்ய உகந்த நேரம் 
காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை 

விநாயகர் பிரதிஷ்டை செய்து பூஜை செய்ய உகந்த நேரம் 
காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை
காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை
மாலை 3.30 மணி முதல் 4.30 மணி வரை
மாலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை

அலுவலகத்தில் பூஜை செய்ய உகந்த நேரம்
காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை
மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை

அன்றைய தினம்
சூரிய உதயம் காலை 6.05 மணிக்கு
இராகு காலம்: 10.30 - 12.00
எமகண்டம்: காலை 3.00 - 4.30
குளிகை: காலை 7.30 - 9.30
நக்ஷத்ர யோகம்: சித்த யோகம்

வெள்ளிக்கிழமை அன்று விநாயகர் சதுர்த்தி வருவதால் விநாயக பெருமானுக்கு பச்சரிசி மாவு விசேஷம். இனிப்பு மற்றும் கார மோதகம் செய்வது விசேஷம். மேலும், ஆலயத்தில் நடைபெறும் ராகு-கேது சிறப்பு பூஜையில் பங்கேற்கலாம். கணபதி ஹோமத்திற்குக் கொப்பரை கொடுத்து உதவுவது சிறப்பு. 

எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன அபிஷேகம் செய்யலாம்

மேஷம் - மஞ்சள் பொடி 

ரிஷபம் - சானப்பொடி

மிதுனம் - எலுமிச்சை சாறு

கடகம் - பச்சரிசி மாவு

சிம்மம் - பஞ்சாமிருதம்

கன்னி - நார்தம் பழம் மற்றும் சத்துக்குடி

துலாம் - தேன்

விருச்சிகம் - இளநீர்

தனுசு - மஞ்சள் பொடி மற்றும் தேன்

மகரம் - சந்தனம்

கும்பம் - பஞ்சாமிருதம்

மீனம் - மஞ்சள் பொடி மற்றும் இளநீர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com